ஹொட்டலில் சர்வர் வேலை... ரூ.50 சம்பளம் பெற்ற பிரபல நடிகை! இவரின் சொத்து இப்போ எத்தனை கோடி தெரியுமா?
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ராக்கி சாவந்த் தான் கடந்து வந்த கஷ்டத்தை குறித்து பேசியுள்ளார்.
நடிகை ராக்கி சாவந்த்
தமிழ் சினிமாவில் என் சகியே, முத்திரை, கம்பீரம் உட்பட்ட படங்களில் ஐட்டம் நடனமாடி பிரபலமானவர் தான் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்.
இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இவரது கவர்ச்சி புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்பு அவர் ஏமாற்றிவிட்டதாக பரபரப்பை கிளப்பினார்.
பின்பு 2022ம் ஆண்டு ஆதில் துரானி என்பவரை காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரும் ராக்கி சாவந்த்தை அடித்து துன்புறுத்துவதாகவும், இவரது நிர்வாண காட்சியை கோடி ரூபாய்க்கு விற்றதாகவும் பொலிசில் புகார் அளித்து, அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.
இவர் சிறுவயதில் இருந்த சூழ்நிலை பயங்கர கஷ்டமாக இருந்துள்ளது. 10 வயதிலிருந்து வேலைக்கு சென்ற இவர் ஹொட்டல் ஒன்றில் பரிமாறும் வேலையை செய்துள்ளார். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் கிடைக்குமாம்.
ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்ததால், சினிமாவிற்கு வந்துள்ளார். ஆனால் இவரின் பெற்றோருக்கு விருப்பமில்லாமல் அவர்களை மீறி நடித்து வருகின்றார்.
சினிமாவிற்காக உடல் மற்றும் முக அறுவை சிகிச்சை கொண்ட இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தற்போது இவரது மாத வருமானம் 50 லட்சம் கிடைப்பதுடன், பிளம்பர படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகின்றார்.
Mercedes-Benz, BMW X5 என விலை உயர்த்த சொகுசு கார்களை வைத்திருக்கும் இவரின் சொத்து மதிப்பு, 41.65 கோடி உள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |