பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் மிளகு! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
உணவுக்கு காரம் மட்டுமல்ல, கூடுதல் சுவையை உண்டாக்க கருப்பு மிளகு பெரிதும் உதவும். ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு நம் முன்னோர்கள் உணவுகளில் பயன்படுத்தினர்.
இருப்பினும் இதனை உணவில் அளவோடு சேர்த்து கொள்வது அவசியமானதாகும். இல்லை என்றால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் கருப்பு மிளகை அதிகமாக எடுத்து கொண்டால் என்ன மாதிரியான பக்கவிளைவுகளை சந்திக் கூடும் என்று இங்கு பார்ப்போம்.
அதிகம் மிளகு எடுத்துக்கொண்டால் பிரச்சினையா?
கருப்பு மிளகை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நுரையீரலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
கருப்பு மிளகை நாம் நமது சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும் போது சரும பாதிப்பு அதிகளவில் உண்டாக வாய்ப்புள்ளது. சருமம் சிவந்து போதல் மற்றும் எரியும் உணர்வு ஏற்படும்.
கருப்பு மிளகை கர்ப்பகாலத்தில் அதிகமாக எடுத்து கொள்ளும் போது கருச்சிதைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
கணவரைப் பிரிந்த சமந்தா பிரபல தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனமா? வெளியான ரகசியம்
வயிறு பிரச்சினை இருப்பவர்கள் தவிர்க்கவும்
கருப்பு மிளகை அதிகம் உட்கொள்வதால் வயிற்று வலி அல்லது பிற இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இரைப்பை குடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கருப்பு மிளகை தவிர்ப்பது நல்லது.
கருப்பு மிளகு உடலில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலி நிவாரண பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த விளைவுகளை உருவாக்கும் மருந்துகளுடன் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
கருப்பு மிளகை சாப்பிடும் போது வயிறு, தொண்டை போன்ற பகுதிகளில் எரிச்சலை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் கருப்பு மிளகை எடுத்து கொள்ளும் முன் மருத்துவர் அறிவுரை பேரில் எடுத்துக் கொள்ளுங்கள். மிதமான அளவு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.