12 ராசிகளில் எந்த ராசியினர் அதிகமாக பொய் பேசுவார்கள்?
ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் பொய் பேசுவார்களாம் அதிலும் அவர்களிடம் எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிக்கவே முடியாதாம்.
பொய் கூறும் ராசியினர்
பொதுவாக ஜோதிடத்தில் நாம் பிறந்த ராசியை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று கூற முடியுமாம்.
ஒவ்வொரு மனிதனும் பிறந்த ராசியை வைத்து அவன் எப்படிப்பட்ட குணம் கெண்டவன் மற்றும் அவன் எப்படி மக்களிடம் தன் தொடர்பை கொண்டு செல்வான் என்று கூறப்பட்டுள்ளது.

பொய் பேசும் போது அந்த சூழலை பொறுத்து நல்லது கெட்டது என்று திர்மானிக்கப்படுகின்றது. ஆனால் 12 ராசிகளில் சில ராசிகளில் பிறந்தவர்கள் வாயை திறந்தாலே பொய் சொல்வார்களாம்.
இவர்கள் பொய் சொன்னால் இவர்களை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாதபடி வண்ண வண்ணமாக பொய் சொல்வார்களாம்.
இவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. அது எந்த ராசியினர் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசியில் பிறந்தவர்கள் எரிமலை போல கொந்தளித்து கொண்டு இருப்பவர்கள். இவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் மிகவும் கோபத்துடன் இருப்பார்கள்.
- ஆனால் இவர்கள் நிலை பார்த்து இவர்களிடம் நி கோபமாக இருக்கிறாயா என எதாவது விசாரித்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் கோபமாக இல்லை என பொய் சொல்வார்களாம்.
ரிஷபம்
- இவர்களை காளை அல்லது கருப்பு குதிரை என்று கூறலாம். இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.
- தங்களுக்கு பிடித்த நபர், பொருள், அல்லது ஏதேனும் ஒரு விஷயம் மற்றவர்களிடம் இருந்தால் அதனைக் கண்டு பொறாமைப்படும் கேவலமான குணம் இவர்களிடம் இருக்கும்.
- ஆனால் இவாகள் பொறாமைப்படுவதை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு மற்றவர்களுடன் வழிந்து வழிந்து பொய் பேசி அவர்களோடு பொய்யாகவே பழகுவார்கள்.
சிம்மம்
- இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். தனக்கு பிடித்த ஒரு நபர் அவர்களை பார்த்தால் அதை தெரியாதது போல காட்டிக்கொள்வார்கள்.
- எப்போதும் ஒரு வேதனை வட்டத்தினுள் இருப்பார்களாம். அப்படி வேதனை வட்டத்தினுள் இருப்பதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் பொய் சொல்வார்களாம்.
தனுசு
- இவர்கள் யாருடைய உணர்வு, மரியாதை இவை எதையும் பொருட்படுத்தாமல் பொய் கூறுவார்கள்.
- தங்களை மிகவும் ஆளுமை உடையவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இவர்கள் எப்பொழுதும் பல காரியங்களுக்காக மற்றவர்களுடன் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.
- இவர்கள் செய்யும் வெலைகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு இருந்தாலும் பாதிப்பு இல்லை என எல்லோரிடமும் தனக்கு நல்ல பெயர் எடுப்பதற்காக பொய் பேசுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).