கேதுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த எண்ணில் பிறந்தவரா நீங்க? அப்போ கோடீஸ்வர யோகம் உறுதி!
ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் ஒருவருடைய குணநலன்கள், வாழ்க்கைப் போக்கு மற்றும் எதிர்காலம் குறித்து அறிந்துகொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜோதிடத்திலும் எண் கணிதத்திலும் ராகு, கேது ஆகிய இரண்டும் பொதுவாக நிழல் கிரகங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இவை வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள், எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் கர்ம வினைகள் தொடர்பான அனுபவங்களை ஏற்படுத்தும் கிரகங்களாகப் பார்க்கப்படுகின்றன. இதனால், இவ்விரு கிரகங்களும் பெரும்பாலும் எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
ஆனால், உண்மையில் கேது எப்போதும் தீமைகளை மட்டுமே தரும் கிரகம் அல்ல. ஜோதிட சாஸ்திரத்தின்படி, கேது ஒருவருக்கு ஆன்மீக அறிவு, ஞானம் மற்றும் உள்ளுணர்வு போன்ற சிறப்பான பலன்களையும் வழங்கக்கூடியது.
அந்த வகையில், எண் கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கும் கேதுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த எண் 7 ஆகும்.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றங்களை அடைவதோடு, மற்றவர்களைவிட அதிகமான உள்ளுணர்வு, ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அப்படி, எண் 7 ஏன் கேதுவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகக் கருதப்படுகிறது? இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு கேதுவின் அருள் எத்தகைய சிறப்பான பலன்களை வழங்கும்? என்பது குறித்தும் எண் 7 இன் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் விரிவான பார்க்கலாம்.

எண் கணிதத்தில் 7-ஆம் எண்ணின் முக்கியத்துவம்
எந்த மாதத்திலும் 7, 16 அல்லது 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எண் கணிதத்தின்படி 7-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இந்த எண்ணின் அதிபதியாக கேது கிரகம் விளங்குகிறது. மர்மம், ஆன்மீகம் மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கேது, இவர்களின் ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பாதையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
எண் 7-ல் பிறந்தவர்களின் ஆளுமை
இவர்கள் பொதுவாக ஆழ்ந்த சிந்தனையாளர்களாகவும், ஆர்வமும் தேடல் குணமும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, ஒவ்வொன்றையும் ஆராய்வது, அதன் ஆழமான உண்மைகளைக் கண்டறிவது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இவர்களின் தனித்துவமான பண்புகளில் ஒன்று வலுவான உள்ளுணர்வு. ஜோதிட நம்பிக்கைகளின்படி, எதிர்காலத்தில் நிகழக்கூடிய சில மாற்றங்களையும் சம்பவங்களையும் முன்கூட்டியே உணரும் ஆற்றல் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
கேதுவின் தாக்கம்
எண் 7-ன் ஆதிக்கம் கொண்டவர்களின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் பலவும் எதிர்பாராத நேரங்களில் நடைபெறுவதாக எண் கணிதம் கூறுகிறது. திருமணம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான மாற்றங்கள் திட்டமிட்டபடி நிகழாமல், திடீர் திருப்பங்களுடன் அமையலாம்.
ஆரம்பகால வாழ்க்கையில் போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்க நேரிட்டாலும், பிற்காலத்தில் வசதி, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

எந்தத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்?
கேது ஆழ்ந்த அறிவு மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுவதால், எண் 7-ல் பிறந்தவர்கள் ஆராய்ச்சி, அறிவியல், ஜோதிடம், புலனாய்வு போன்ற ஆழ்ந்த சிந்தனையும் நுணுக்கமான ஆய்வும் தேவைப்படும் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்கள் வழக்கமான பாதைகளைப் பின்பற்ற விரும்புவதில்லை. மாறாக, தனித்துவமான சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகளைக் கையாள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களின் வித்தியாசமான அணுகுமுறையும் முடிவெடுக்கும் திறனும் தொழில் வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும் எனக் கூறப்படுகிறது.
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தாலும், பணிவையும் எளிமையையும் கடைப்பிடிப்பார்கள். ஆடம்பரத்தையும் பிறரின் கவனத்தையும் விரும்பாமல், அமைதியான மற்றும் எளிமையான வாழ்க்கையையே அதிகம் விரும்புவார்கள்.
மேலும், கேதுவின் தாக்கம் வயது அதிகரிக்கும்போது வலுப்பெறுவதாகக் கருதப்படுவதால், எண் 7-ன் ஆதிக்கம் கொண்டவர்கள் பிற்காலத்தில் கணிசமான செல்வம் மற்றும் சொத்துக்களைச் சேர்க்கும் வாய்ப்பும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |