29 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் சனி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிடத்தில் நீதிமான் என்று போற்றப்படுபவர் சனி பகவான். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் இவர், மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிக்கும் சனியின் தாக்கம் மனித வாழ்க்கையில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. தற்போது மீன ராசியில் பயணிக்கும் சனி பகவான், 2026 ஆம் ஆண்டு முழுவதும் அங்கேயே இருப்பார்.

பின்னர் 2027 ஜூன் 3 ஆம் தேதி தனது நீச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். செவ்வாய் அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்கு சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பும் சனி, அங்கு அடுத்த 2½ ஆண்டுகள் பயணிக்கவுள்ளார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அப்படி 2027 ஆம் ஆண்டு சனி பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.
கடகம்

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியின் போது, சனி பகவான் கடக ராசியின் 10-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதுடன், பல நல்ல செய்திகளையும் பெறக்கூடும். பணிபுரிபவர்களின் நேர்மை மற்றும் ஒழுக்கம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைப்பதுடன், மேற்கொள்ளும் காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
துலாம்

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியின் போது, சனி பகவான் துலாம் ராசியின் 7-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இந்தப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களை கொடுக்கும்.
வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத பணவரவும் ஏற்படடும்.
ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைப்பதுடன், புதிய முதலீடுகளும் சாதகமான பலன்களைத் தரக்கூடும்.நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த முக்கியமான வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும்.
மகரம்

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியின் போது, சனி பகவான் மகர ராசியின் 4-ஆவது வீட்டிற்குச் செல்கிறார்.
இதனால் மகர ராசிக்காரர்கள் சந்தித்து வந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், வருமானமும் அதிகரிக்கும்.
புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் ஆதரவு கிடைப்பதுடன், தொழில் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக, தன்னம்பிக்கை அதிகரித்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியின் போது, சனி பகவான் கும்ப ராசியின் 3-ஆவது வீட்டிற்குச் செல்கிறார்.
இதனால் கும்ப ராசிக்காரர்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும் வாய்ப்புள்ளது.எதிரிகளை வென்று முன்னேறுவதுடன், நீதிமன்ற வழக்குகளிலும் சாதகமான முடிவுகளைப் பெறலாம்.
பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, நீண்ட நாட்களாகக் கிடைக்காமல் இருந்த பணமும் கைக்கு வந்து சேரும். முக்கியமான முடிவுகளை நிதானமாகவும் நன்கு சிந்தித்தும் எடுத்தால் வெற்றி உறுதி.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |