இயற்கையான மேக்கப் ப்ரைமர்கள் வேண்டுமா? இந்த 3 பொருட்களில் ஒன்றை பயன்படுத்துங்க!
பொதுவாகவே குறைபாடற்ற, நேர்த்தியான ஒப்பனை தோற்றத்தைப் பெறுவதில், ப்ரைமர் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒரு சரியான ப்ரைமர் மட்டுமே மென்மையான அடித்தளத்தை உருவாக்கி, சருமத்தில் உள்ள குறைபாடுகளை மறைத்து ஒப்பனையை நீண்ட நேரத்துக்கு நிலைக்க செய்கின்றது.
எனவே தான் ஒரு சீரான மேக்- அப் லுக்கை பெற சரியாக ப்ரைமரை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.
ஆனால் சிலிகான் அடிப்படையிலான ரசாயனங்கள் கலக்கப்பட்ட ப்ரைமர்களை நம்புவதற்குப் பதிலாக, பல அழகு கலை நிபுணர்கள், தற்காலத்தில் இயற்கையான ப்ரைமிங் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த எண்ணெய்கள் சருமத்தை தயார் செய்வது மட்டுமல்லாமல், அதை ஊட்டமளித்து, ஆரோக்கியமான, பிரகாசமான பளபளப்பை கொடுப்பதுடன், இதனை பயன்படுத்திய பின்னர் மேக்- அப் போடுவதால் சீரான அழகிய தோற்றத்தை நீண்ட நேரத்துக்கு பெற முடிகின்றது.
அந்தவகையில் சருமத்துக்கு ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடிய சில இயற்கை ப்ரைமர்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கை ப்ரைமர்கள்
அரிசி தவிடு எண்ணெய் ( Rice Bran Oil)
அரிசி தவிடு எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் செரிவாக காணப்படுவதால், இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள துணைப்புரிகின்றது.
மேலும் பிரகாசமாக்குகிறது மற்றும் நேர்த்தியான கோடுகளை மென்மையாக்க உதவுகிறது. ஒப்பனைக்கு முன்னர் இந்த எண்ணெயை ப்ரைமராக பயன்படுத்துவது சிறந்தது. இது சாதாரண மற்றும் வறண்ட சருமத்துக்கு உகந்தது.
ஜோஜோபா எண்ணெய் (Jojoba Oil)
ஜோஜோபா எண்ணெய் இயற்கையான சருமத்தை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், துளைகளை அடைக்காமல் ஈரப்பதமாக்குகிறது.
மேலும் ஒப்பனைக்கு சமமான தளத்தை உருவாக்கிக்கொடுப்பதில் இந்த எண்ணெய் பெரிதும் பயனளிக்கின்றது. இது அனைத்து தோல் வகைகளுக்கும், குறிப்பாக அதிகஉணர்திறன் வாய்ந்த சருமத்துக்கு மிகவும் பொருத்தமானது.
மேக் அப் செய்வதற்கு முன்னர் ஒரு துளி அல்லது இரண்டு துளிகளை எடுத்து முகத்தில் மசாஜ் செய்து, 3–5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் ஒப்பனை செய்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.
இனிப்பு பாதாம் எண்ணெய் (Sweet Almond Oil)
பாதாம் எண்ணெய் சரும அமைப்பை மென்மையாக்குவதுடன் சருமத்தை வறட்சியடையாமல் பாதுகாப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
இந்த எண்ணெயை ப்ரைமராக பயன்படுத்தும் போது, மேக்கப் எளிதாக சறுக்கவும் நேர்த்தியாக இருக்கவும் துணைப்புரிகின்றது. இது சாதாரண மற்றும் வறண்ட சருமத்துக்கு சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |