அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கும் 3 நட்சத்திரங்கள்... 2025 இல் இவர்களுக்கு ராஜயோகம் உறுதி
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரங்களை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் குறித்து கணிக்க முடியும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி புதிய ஆண்டில் ராஜயோகத்தை பெற்று அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரத்தினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதும் அமோகமான பலன்கள் கிடைக்கும்.
அவர்கள் வியாபாரம் மற்றும் தொழில் ரீதியில் இந்த ஆண்டைவிடவும் அதிக முன்னேற்றத்தை காண்பார்கள்.
இவர்களின் நிதி நிலையில் பாரிய மாற்றம் உண்மாகும். 2025 இல் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
கிருத்திகை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்.
குடும்ப வாழ்க்கையிலும் நிதி ரீதியாகவும் இருந்த பிரச்சினைகள் நீங்கி வாழ்க்கை முன்னேற்ற பாரதையில் செல்லும்.
இவர்களுக்கு குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும். தொழில் ரீதியிலும் சாதக பலன்கள் கிடைக்கும்.
கேட்டை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 2025 இல் ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடிய அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.
புதிய தொழில் அல்லது வியபாபரத்தை தொடங்கும் வாய்ப்புகள் அமையும். பல்வேறு வழிகளிலும் வருமானம் பெறக்கூடிய வாய்ப்பு அமையும்.
இந்த காலகட்டம் வாழ்வில் முக்கியமான விடயங்கள் நடைபெறக்கூடிய பொன்னான காலமாக அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |