இவர்களிடம் பணம் குவியும்! இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் லட்சுமியின் மறுஉருவமாம்...
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு அதிக முக்கியத்துவத் கொடுக்கப்படுகின்றது.
காரணம் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை,ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்ககள் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் பணத்தின் கடவுளாக கருப்படும் லட்சுமி தேவியின் மறு உருவமாக பார்க்கப்படுகின்றார்கள்.
இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. அப்படி லட்சுதி தேவியின் ஆசியால் பணத்தில் புரளும் பெண்கள் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோகிணி
லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது ரோகிணி நட்சத்திரம் தான்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பணத்திற்கு அதிபதியாக திகழும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்கள்.
இவர்களின் வாழ்வில் நிதி ரீதியாகன பிரச்சினைகளை ஒருபோதும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. சகல செல்வங்களையும் பெற்று ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
புனர் பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நேர்மையாக வழியில் தான் முன்னேற வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாகவும், நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் கடின உழைப்பால் உயர வேண்டும் என்று நினைக்கின்ற போதிலும், லட்சுமி தேவியின் ஆசியால் அவர்களே நினைக்காத வேகத்தில் இவர்களின் நிதி முன்னேற்றம் இருக்கும்.
இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் சரி மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு இவர்களின் வளர்ச்சி இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாக இருப்பாக இருப்பார்கள்.
அனுஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே தன்னம்பிக்கையும் மன உறுதியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
சுத்தத்தக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். லட்சுமியின் ஆசீர்வாதம் இவர்களுக்கு முழுமையாக இருக்கும்.
இவர்களின் நல்ல குணங்களுடன் லட்சுமியின் ஆசியும் சேர்ந்து இவர்களை அசுர வேகத்தில் நிதி ரீதியில் வளர்ச்சியடைய செய்கின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |