இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு மனைவி சொல்வது தான் வேதவாக்கு... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட குணங்கள் மற்றும் தனித்துவ திறமைகளில் பெருமளவான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விடவும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி மனைவியின் பேச்சை வேதவாக்காக கொண்டு அப்படியே செய்து முடிக்கும் ஆண் நட்சத்திரங்கள் எவை என இந்த பதிவில் பார்கலாம்.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் இயல்புடையவர்கள்.
பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை வாழ்வில் முக்கிய கொள்கையாக கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் தங்களின் மனைவி சொல்லுக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.
இவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனைவியின் அறிவுரைகளை கேட்டு நடக்கின்றார்கள். இந்த அறிவுரைகள் அவர்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியின் உணர்வுகளுக்கும் அவர்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திர ஆண்கள் முடிந்தவரை மோதலைத் தவிர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.இதனால் மனைவியின் சொல்லை அப்படியே கேட்டு நடக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
அவர்கள் வாழ்க்கையில் தங்கள் மனைவி ஆதிக்கம் செலுத்துவதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். மாறாக அதை நினைத்து பெருமைபடும் உன்னத குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
பூரம்
பூர நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியின் பேச்சை மற்றவர்கள் முன் கேட்காதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள் ஆனால், உண்மையில் மனைவி சொல்லை அப்படியே கேட்டு நடப்பார்கள்.
அவர்கள் மிகவும் வசீகரமானவர்கள், விஷயங்களைத் தாங்களாகவே கையாள வேண்டும் என நினைப்பவர்கள் ஆனால் திருமணத்தின் பின்னர் முழுமையாக மனைவியின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவார்கள்.
அவர்கள் எப்போதும் தங்கள் மனைவியின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதால், மனைவி பேச்சை கேட்பதை மகிழ்சியாக நினைக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
