இந்த ராசியினருக்கு உலகத்துலயே பிடிச்சது தூக்கம் தானாம்.. உங்க ராசி என்ன?
பொதுவாகவே ஓய்வெடுப்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றால் மிகையாகாது. ஆனால் சிலர் தூக்குவதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் அதிகம் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அதிகம் தூங்குவதை நிறுத்த வேண்டும் என நினைத்தாலும், அவர்களால் முடியாது. அப்படி ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தூங்குவதில் அலாதி இன்பம் காணும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சொகுசு மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் மீது அதீத ஈர்ப்பு கெண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும் விஷயத்தை விரும்புகிறார்கள், அதன் காரணமாகவே தூக்கம் இவர்களுக்கு மிகப்பிடித்த விடயமாக இருக்கும்.
ஓய்வெடுப்பதில் இவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதை செய்தாலும் கிடைப்பதில்லை. அவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நேரமெல்லாம் படுக்கையிலேயே இருப்பதை நிச்சயம் விரும்புவார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் அதீத கற்பனை ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்ககள். இவர்கள் கனவுலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையில் போராடுகிறார்கள்.
அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். கற்பனை செய்வலதில் இவர்களுக்கு இருக்கம் ஈடுபாடு காரணமாக தூங்குவதையும், சும்மாவே ஓய்வெடுப்பதையும் அதிகம் விரும்புவார்கள்.
அவர்கள் எப்போதும் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காகவும் இவர்கள் பெரும்பாலும் தூக்கத்தை பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் அனைவரின் மீதும் அன்பாக இருக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியினர் சந்திரனால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களின் மனநிலையில் பெருமளவில் ஆதிகம் செலுத்தும்.
இவர்கள் அக்கறை மற்றும் பச்சாதாப இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த தன்னலமற்ற தன்மை இவர்களை விரைவில் சோர்வடைய செய்து விடுகின்றது.
எனவே தூக்கம் அவர்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிடுகின்றது.இவர்கள் தங்களை துன்பத்தில் இருந்து மீட்டுக்கொள்ள தூக்கத்தையே தெரிவு செய்கின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |