உலகில் பணக்கார நாடு: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் ஒரு நாடு பணக்கார நாடு என்று சொல்லப்படுகிறது.
உலகின் பணக்கார நாடு
உலகின் பணக்கார நாடகள் என்று சொன்னாலே நாம் எல்லோரும் நினைப்பது அமெரிக்கா அல்லது சீனா என்று தான்.
ஆனால் இல்லை. ஆனால், ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் ஒரு நாடு பணக்கார நாடு என்று சொல்லப்படுகிறது.
அப்படி பார்த்தால் பணக்கார நாடுகள் நாம் நினைப்பவை இல்லை. இந்த வகையில் பணக்கார நாடுகளின் பட்டியலில் எந்த நாடு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

லிஸ்ட்
அயர்லாந்து - சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி அயர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. குறைந்த மக்கள்தொகை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக இந்நாடு இந்த இடத்தை அடைந்துள்ளது. மிகவும் முக்கிய கருத்து உலகின் பிரபலமான பல நாடுகள் இந்த நாட்டில் முதலீடு செய்துள்ளன.
லக்சம்பர்க் - அடுத்த இடம் லக்சம்பர்க் ஆகும். இந்த நாடு மிகக் குறைந்த வித்தியாசத்தில் அயர்லாந்துக்கு பின்னால் உள்ளது. தனிநபர் வருமானத்தில் அயர்லாந்தை விட முன்னணியில் உள்ளது. இந்நாட்டில் ஆண்டு சராசரி தனிநபர் வருமானம் 73 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும். அதிலும் தனிநபர் வருமானம் இங்கு 20000 ரூபாவாக(இந்திய ரூபாய் மதிப்பின்படி) இருக்கும்.

சிங்கப்பூர் - அடுத்த இடம் சிங்கப்பூர். இந்த நாடு பல ஆண்டுகளாக முதலீடு மற்றும் வர்த்தகத்தின் மையமாக திகழ்கிறது. இங்கு தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 53 லட்சம் டாக்கா ஆகும். அதாவது ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் 14 ஆயிரம் எனப்படுகின்றது.
கத்தார் - சமிபத்திய கூற்றுப்படி பணக்கார நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடான கத்தாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டில் வருடாந்த தனிநபர் வருமானம் 51 லட்சம் ரூபாக்கும் அதிகமாகும். பெரிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இந்த நாட்டின் முக்கியமான வளங்கள் ஆகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |