இவர்களின் அகராதியில் மன்னிப்பே கிடையாதாம்... பக்காவா பழிவாங்கும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவ திறமை மற்றும் தனித்துவமான நேர்மறை, எதிர்மறை குணங்கள் இருப்பதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்ளும் அன்பு பாசம் காதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதர்களின் பண்புகளில் அவர்களது ராசிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் அது போல் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பழிவாங்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

அப்படி மற்றவர்கள் தங்களுக்கு செய்த அநீதிக்கும், துரோகத்துக்கும் ஒரு போதும் மன்னிப்பு கொடுக்காமல் சமயம் பார்த்து பழிதீர்க்கும் ஆபத்தான ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால், இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் குணம் சற்று அதிகமாகவே இருக்கும்.
கோவ குணம் கொண்டவர்கள். அவர்களது தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எது நடந்தாலும் அதை ஆயுள் முழுவதும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்களாம். அதற்காக பழிவாங்கும் வரையில் இவர்களின் கோபம் அடங்காது.
இந்த ராசியினருக்கு துரோகம் செய்வதும் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதும் ஒன்று தான். இவர்கள் பழிதீர்க்கும் வரையில் ஓயவே மாட்டார்கள்.
சிம்மம்

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசியினர் எப்போதும் தங்களின் மீது மற்றவர்களின் கவனம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் ஒருவர் மீது அன்பு கொண்டால் அந்த நபருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால் தங்களுக்கு யாரேனும் துரோகம் செய்துவிட்டால் இவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டாமல் ஓயமாட்டார்கள்.
இவர்களின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு இவர்கள் பழிவாங்காமல் நிச்சயம் ஓயவே மாட்டார்கள்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் தாங்கள் சொல்வது தான் சரி என்ற மனநிலையில் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் உணவில்லாமல் கூட இருப்பார்கள் ஆனால் சுதந்திரம் இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் போல் இருந்தாலும், அத்தனை சுலபமாக யாரையும் மன்னிப்பதில்லை.
யாராவது கும்பராசிக்காரர்களை ஏமாற்றி விட்டால், இவர்களின் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் வரையில் ஓயவே மாட்டார்கள்.இவர்களுக்கு பழிவாங்கும் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |