இந்த ராசியில் பிறந்தவர்களை தவறியும் சீண்டாதீங்க... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவரின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கு தீங்கு செய்பவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவர்கள் சாதாரணமாக இருக்கும் போது எவ்வளவு நல்லவர்களாகவும் அமைதியாகவும் இருக்கின்றார்களோ, தங்களுக்கு தீமை செய்தவர்களை கையாளும் போது இவர்களின் அதற்கு நேர்எதிராக இருப்பார்கள்.
அப்படி தங்களுக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கும் எண்ணம் அதிகமாக கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசியினர் இயல்பாகவே சற்று அகங்காரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை காட்டிலும் எதிலும் சற்று வேகமாக செயல்ப்படும் தன்மை கொண்டவர்கள்.
இவர்களின் பார்வை மற்றும் பேச்சு நெருப்புக்கு நிகராக இருக்கும். யாரேனும் இவர்களின் மனதில் குழப்பம் விளைவித்தால் அவர்களின் வாழ்வையே இவர்கள் நரகமாக்கிவிடுவார்கள்.
அதிகமாக கோபப்படும் குணம் கொண்ட இவர்களை தேவையில்லாமல் சீண்வது தானே போய் பிரச்சினையில் மாட்டிக்கொள்வதற்கு நிகரானது.
இயல்பில் மிகவும் நல்ல குணம் கொண்ட இவர்களுக்கு தீங்கு செய்பவர்கள் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசியினருக்கு இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் நிறைவாக அமைந்திருக்கும்.
இவர்களின் ஆளுமை மற்றவர்களை அடக்கி ஆள முயற்சிக்குமே தவிர யாருக்கும் அடங்கி போதும் குணம் துளியும் இவர்களுக்கு இருக்காது. இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள்.
இவர்களை யாரேனும் பகைத்தால் அவர்களை வெல்வதையே வாழ்வில் தலையாய கடமையாக எடுத்துக்கொள்ளும் குணம் இவர்களுக்கு இருக்கும். சிம்ம ராசியினரை பகைப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சற்று சிந்திக்க வேண்டும். இவர்கள் மிகவும் ஆபத்தான எதிரிகளாக மாறுவார்கள்.
விருச்சிகம்
செவ்வாய்யின் ஆதிக்கத்தில் பிறப்பெருத்த மற்றொரு ராசியாக விருச்சிகம் இருப்பதனால். இவர்களுக்கும் அதிக கோப உணர்வு மற்றும் அகங்கார குணம் அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களின் வழியில் குறுக்கிடவே மாட்டார்கள். குறிப்பாக அவர்களிடம் பேச்சுவார்தையே வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இவர்களை வேண்டும் என்றே சீண்டுகின்றவர்களுக்கு தக்க பாடத்தை கற்றுக்கொடுக்காமல் ஓய மாட்டார்கள். இவர்களை பகைத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இவர்ளிடம் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |