உயிரை விட ஒழுக்கத்தை பெரிதாக மதிக்கும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சுய ஒழுக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அப்படி தன் உயிரை விடவும் ஒழுக்கத்தை பெரிதாக நினைக்கும் உன்னதமான குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்கள் பேசுவதில் கோபமாகவும், வாழ்க்கையில் வெளிப்படையான நபராகவும் இருப்பதுடன் உண்மையை சொல்ல ஒருபோதும் பயப்படவே மாட்டார்கள்.
ஆனால் சுய ஒழுக்கத்துக்கு மனதளவிலும் சரி தங்களின் நடத்தை ரீதியிலும் சரி பெரிதும் முன்னுரிமை கொடுப்பார்கள்.
கடகம்
கடக ராசியினர் தாங்கள் குறைபாடற்றவர்கள் அல்ல என்பதையும் தவறுகளைச் செய்வார்கள் என்பதையும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால் ஒழுக்கம் பற்றிய விடயங்களில் மாத்திரம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
அவர்கள் மிகவும் சுய ஒழுக்கமுள்ள ராசிகளில் ஒருவர் என்பதில் ஆச்சரியமில்லை. இவர்கள் இயல்பாகவே சமூகத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த உறவிலும் ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த செயலிலும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எந்த செயலிலும் முழுமையும் நேர்த்தியும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இதிக நேர்த்தி மற்றும் சுய ஒழுக்கம் வாழ்வில் எத்தகைய துன்பத்தை கொடுத்தாலும், ஒருபோதும் ஒழுக்கத்துக்கு மாறாக நடந்துக்கொள்ளவே மாட்டார்கள்.
இவர்கள் தங்களின் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் முன்னரே அதனை கண்டுப்பிடித்து திருத்திக்டிகொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |