வெங்காயத்தை எப்போது சாப்பிட வேண்டும்? பலர் செய்யும் தவறு இது தான்
வெங்காயம் ஒரு மரக்கறி வகையாகும். அனைத்து வகையான உணவு செய்யும் போதும் வெங்காயம் பயன்படுத்துவது சாதாரணமாகும். வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.
இந்த வெங்காயத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்த வெங்காயத்தை பலர் பலவாறு சாப்பிடுவார்கள்.
வெங்காயம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் வெங்காயத்தை எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்பதில் பல விடயம் உள்ளது. இது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
வெங்காயம் எப்போத சாப்பிட வேண்டும்
வெங்காயத்தில் பல சத்துக்கள் இருக்கின்றன. கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் சி, வைட்டமின் பி2, வைட்டமின் கே மற்றும் தயமின், சல்பர், ஆக்ஸினேற்றிகள் உட்பட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
பலரும் வெங்காயத்தை காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடுவார்கள். இது நன்மை தரக்கூடிய ஒரு விடயமாகும். வெங்காயம் ஒரு நச்சு நீக்கி என்பதால் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
அதுமட்டுமின்றி, அதிலிருக்கும் சல்பர் கலவைகள் நொதி உற்பத்தியை அதிகரிக்க செய்வதால் நாள் முழுவதும் சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு இந்த வெங்காயம் பயன்படும்.
இத தவிர வெங்காயத்தை இரவு உணவுடன் அல்லது மதிய உணவுடன் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உறிஞ்சப்படும்.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது அதில் இருக்கும் வைட்டமின்கள் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். வெங்காயத்தை சமைத்து சாப்பிட்டால் ஜீரணிக்க எளிதானது.
ஆனால் வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை விட அதை பச்சையாக சாப்பிட்டால் அதிக நன்மைகளை பெற முடியும். இதை நீங்கள் சாலட் பருப்பு காய்கறி அல்லது ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வெங்காயத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டால் இரும்பு மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |