உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கனுமா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
உடம்பில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஹீமோகுளோபின்
ரத்தச்சோகை என்பது உடலில் இரத்தத்தின் குறைபாடு ஆகும். இரத்தச்சோகையில், ஆக்ஸிஜன் உடல் திசுக்களை அடையாது, ஏனெனில், ஹீமோகுளோபின் இல்லாததால் ஆக்ஸிஜன் திசுக்களை அடையாது.
இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், தோல் வெளிர் நிறத்தில் மாறி, இதயத் துடிப்பு அதிகரிக்கின்றது. மேலும் தலைவலி மற்றும் தலைச்சுற்றல், குளிர்ந்த கைகள் மற்றும் குளிர்ந்த கால்கள் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றது.
உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முக்கிய உணவுகள் குறித்துப் பார்ப்போம்.
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்
வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ஹீமோகுளோபினை அதிகரித்து பல நோய்களைத் தடுக்கின்றது. வைட்டமின் சி சத்தானது ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய், தக்காளி, திராட்சை, ப்ளாக்பெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் அதிகமாகவே இருக்கின்றது.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான சிவப்பு இறைச்சி, பீட்ரூட், கீரை, பயிறு, பருப்பு வகைகள், எள், பீன்ஸ், முட்டை, கோழி போன்றவற்றை கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ளவும்.
மாதுளையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளது. இவை ரத்தத்தினை அதிகரிப்பதுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது.
ஹீமோகுளோபின் அளவை எளிதில் அதிகமாக்குகின்றது அத்திப்பழம். காலை உணவிற்கு முன்பு வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அத்திப்பழங்களை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் பாலில் கலந்து குடிக்கவும். தேவையெனில் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
பாலில் வைட்டமின் பி 12, ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி 2) மற்றும் நியாசின் (வைட்டமின் பி 3) ஆகியவை உள்ளன. இவை இரத்த சிவப்பணுக்கள் உருவாக வைட்டமின் பி 12 அவசியம். எனவே, நீங்கள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் பருகுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |