கருப்பு கயிறை காலில் கட்ட கூடாதா? இந்த இடத்தில் கட்டினால் ஆரோக்கியம் அதிகரிக்குமாம்
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம்.
இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களும் தோற்றம் பெற்றுள்ளன.
அந்த வகையில் இந்து சமய சாஸ்திரங்களின் பிரகாரம் கை, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் கயிறு கட்டும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது.
சாஸ்திரங்களின் அடிப்படையில் கயிறு கட்டுவது மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்தாகவும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் நம்பப்படுகின்றது.
பொதுவகவே நமது உடலில் காணப்படும் எதிர்மமறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான பிரதான நோக்கமாகும்.
தற்காலத்தை பொருத்தவரையில் காலில் கருப்பு கயிறு கட்டும் வழக்கம் பிரபலங்கள் மத்தியில் அதிகரித்தன் காரணமாக சாதாரண மக்கள் மத்தியிலும் இந்த வழக்கம் அதிகரித்துவிட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் அவர்களுடைய கால்களில் கருப்பு நிற கயிறு கட்டி கொள்கின்றனர். ஆனால் கருப்பு கயிறு கட்டுவது சனாதன தர்மத்தின் படி பாதுகாப்பின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.
ஆனால் கறுப்பு கயிறை காலில் கட்டுவது நேர்மறை ஆற்றலுக்கு பதிலாக, எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குவதாகவும் சனிபகவானின் ஆதிக்கத்தை இது அதிகரிப்பதாகவும் குறிப்பிடுடப்படுகின்றது.
அதுமட்டுமன்றி கருப்பு கயிறை கழுத்தில் கட்டும் போதும் அதை வெறுமையாக அணியாமல் அதனுடன் ஏதேனும் ஒரு லாக்கெட்டை சேர்த்து அணிந்துக்கொள்ள வேண்டும்.
கருப்பு கயிறை எங்கே அணிவது சிறப்பு?
சிறு குழந்தைகள் மற்றும் புது மணப்பெண்களின் கழுத்தில் கருப்பு கயிறு அணிவிக்கப்படுவது அவர்களுக்கு ஏற்படும் கெட்ட திருஷ்டிகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது.
ஆனால் கருப்பு கயிறை இடுப்பில் அணிவது மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகின்றது. பகவான் கிருஷ்ணரும் அவரது இடுப்பில் கருப்பு கயிறு கட்டியிருந்தார். அதன் காரணமாகவும் இது சாதக பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.
இடுப்பில் கருப்பு கயிறை அணிவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். பல்வேறு தொற்று நோய்களிடமிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
குறிப்பாக எலும்பு நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. முதுகெலும்பும் வலுவடைகிறது. ஜாதகத்தில் சனி கிரகத்தின் இருப்பு பலவீனமாக இருப்பவர்கள் இடுப்பில் கருப்பு கயிறை அணிந்தால் சனி பகவானின் சாதக பலன்களையும் பெற முடியும்.
இடுப்பில், இடது கை அல்லது கழுத்தில் கருப்பு நூலை அணிவது நன்மை பயக்கும் என்று குறிப்பிடப்டுகின்றது. அதனை அணியும் போது சனிபகவானின் சிலைக்கு முன்னால் இருந்து அணிவது மேலும் சாதக பலன்களை கொடுக்கும்.
பெண்கள் கையில் கருப்பு கயிறு கட்ட விரும்பினால் இடது கையிலும் ஆண்கள் வலது கையிலும் கட்டுவது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |