தங்கக் கடன் vs தங்க விற்பனை- எது உங்களுக்கு லாபத்தை தரும்
இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் மக்கள் தங்கத்தை முதலீடாக பார்க்கிறார்கள், இன்னும் சிலர் குடும்பங்களில் தங்கம் இருப்பது கௌரவமாகவும், சேமிப்பாகவும் பார்க்கிறார்கள்.
இப்படி தங்கத்தை சேமித்து வைக்கும் பொழுது, ஒரு நாள் அவசர தேவைக்காக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்கத்தை தற்போது இருக்கும் நிலவரப்படி விற்பனை செய்வதா? வைத்து கடன் வாங்குவதா? என ஒரே குழப்பமாக இருக்கும். இரண்டில் எதை செய்தால் நாம் லாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் யோசித்துக் கொண்டிருப்போம்.
அப்படியாயின், தொடர்ந்து பதிவில் அவசரமாக பணம் தேவைப்படும் பொழுது வங்கிகள் நகையை விற்பதா? அல்லது அடகு வைப்பதா? என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

விற்பனை
பொதுவாக நகையை வங்கிகளில் வைக்கும் பொழுது வட்டி 8% முதல் 12.5% வரை எடுத்துக் கொள்வார்கள். அதே சமயம், சரியான சமயத்தில் கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால் தங்கம் ஏலம் விடப்படும்.
அதன் பின்னர் உங்களை நகையை நீங்கள் பெற முடியாது. நகையும் இருக்காது அதே சமயத்தில் வட்டியும் செலுத்தியிருப்பீர்கள். கடன் வேண்டாம் என நினைப்பவர்கள் தங்கத்தை விற்பனை செய்து விடுவார்கள்.
கடன் சுமை இருக்காது அதே சமயத்தில் சந்தை விலையை விட 10-15% குறைவாகவே நகைக்கடைக்காரர்கள் பணம் கொடுப்பார்கள்.

கடன் பெற நினைப்பவர்கள்
எதிர்காலத்தில் தங்க விலை உயரும் என நினைத்து குடும்ப சொத்துக்களாக பார்க்கப்படும் தங்கத்தை கடன் வாங்குவதற்கு மூலதனமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இவர்களுக்கு அதிகமான வட்டி இருக்கும். முதலீடு செய்பவர்கள் தங்கத்தை விற்பனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

முடிவு
வட்டி விகிதங்கள், கடன் காலம், தனிப்பட்ட பணத் தேவைகள், எதிர்கால நிதி இலக்குகள் ஆகிய காரணங்களுக்காக தங்க நகைகளை விற்பனை செய்தல் அல்லது கடன் வாங்க அடகு வைத்தல் போன்ற முடிவுகளை எடுத்திருப்பீர்கள். எனவே எதுவாக இருந்தாலும் அது உங்கள் சூழ்நிலைகளை பொறுத்தே அமையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |