மூளை சிறப்பா இயங்கனுமா? இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே விட்டுங்க
பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.அவ்வாறு மூளையை பாதிக்கும் செயற்பாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மூளையை பாதிக்கும் காரணிகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவை உண்பது உங்கள் மூளையை சேதப்படுத்தும். மேலும் உங்கள் நினைவாற்றலைக் பாதிக்கும்.
அதற்கு பதிலாக, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்பதில் கவனம் செலுத்துங்கள்.மேலும் போதியளவு தண்ணீர் அருந்துவது மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
புகைபிடித்தல் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. மேலும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இது நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிக அளவில் மது அருந்துவது மூளை செல்களை சேதப்படுத்தி நினைவாற்றலை பாதிக்கும். ஆல்கஹால் தூக்கத்தையும் பாதிக்கின்றது. இது நினைவக சிக்கல்களை மேலும் அதிகரிக்கிறது. தொடர்ச்சியாக மது அருந்துவது மூளையை வலுவாக பாதிக்கும்.
சமூக தனிமைப்படுத்தல் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் மோசமானது. இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும், இது நினைவாற்றலைக் குறைக்கும். இது உங்கள் மூளை ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது.
சூரிய ஒளி உடலுக்கு மிகவும் இன்றியமையாதது, ஆனால் சூரிய ஒளியில் நின்றுக்கொண்டு கைபேசியை பயன்படுத்துவது மூளையை பாதிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.இது நம்மை அறியாமலேயே மூளையில் குழப்ப நிலையை தோற்றுவிக்கிறது.
உடல் சோர்வாக இருக்கும் பொழுதும் சுகயீனத்தின் போதும் உடலுக்கு போதிய அளவு ஓய்வு தேவைப்படுகின்றது. அவ்வாறான சூழ்நிலையில் வேலை செய்யும் போது மூளையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு மூளை குழப்பமடைகின்றது.
நீண்ட காலத்திற்கு உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது டிமென்ஷியா, அல்சைமர் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் இதுவும் மூளையை வலுவாக பாதிக்கின்றது. மூளை சிறப்பாக இயங்க வேண்டுமாயின் மூளையை பாதிக்கும் செயற்பாடுகளை முழுமையாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |