இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை!
பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் குழந்கைகளின் மூளைவளர்ச்சியை பாதிக்கும் செயற்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையால், மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மேலும் சிறு வயதிலேயே மூளை தேய்மானம் அடையத் தொடங்குகிறது.
உங்கள் சில பழக்கவழக்கங்கள் சிறு வயதிலேயே உங்கள் மூளையை சேதப்படுத்தும். எனவே மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலைப் பாதிக்கும் பழக்கங்கள் இருந்தால், இந்தப் பழக்கங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
மூளையை பாதிக்கும் பழக்கங்கள்
குறைவான வெளிச்சத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் இருப்பது குழந்தைகளின் இயற்கையான சர்காடியம் ரிதமை பாதிக்கும். இதனால் அவர்களின் மனநிலை, அறிவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளிலும் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.
காலை உணவைத் தவிர்ப்பது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் மற்றும் தலைவலி, சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
காலை உணவைத் தவிர்த்தால் மதிய உணவில் அதிகமாகச் சாப்பிடலாம்.
இதனால் உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக காபி குடிப்பதால் சோர்வு ஏற்படும். மூளை ரசாயன அடினோசின் விளைவுகளை தடுப்பதன் மூலம் மூளை ஆற்றலை பாதிக்கிறது.
காலையில் எழுந்தவுடன் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எழுந்தவுடன் உடனடியாக உங்கள் மொபைலைப் பார்ப்பது மன அழுத்தத்தை அதிகரித்து குழந்தைகளை சோர்வடையச் செய்யும். இது பார்வை மற்றும் மூளையின் செயல்பாட்டை வலுவாக பாதிக்கின்றது.
மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தூக்கமின்மை நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை ஊசலாட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க, குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம். அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
மூளையின் ஆரோக்கியத்தை பேண இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதற்கு உங்கள் குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |