சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் ஜூஸ்- வாரத்திற்கு 2 முறை குடிங்க
பொதுவாக மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புகளாக பார்க்கப்படுகின்றன.
இந்த சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுவது, திரவம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிப்பது, கழிவுகளை நீக்குவது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குவது போன்ற பல வேலைகளை செய்கிறது.
உடலை சுத்தப்படுத்தும் முக்கியமான வேலையை செய்வதால் சிறுநீரகங்களில் அடிக்கடி நச்சுக்கள் தேங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
சிறுநீரகங்களில் நச்சுக்கள் சேரும் பொழுது அவ்வப்போது முழுமையாக வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்த நச்சுக்கள் தேங்கி நின்று சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
சிறுநீரகங்களில் இருக்கும் நச்சுக்களை தண்ணீர் முழுமையாக வெளியேற்றும் இருந்த போதிலும், குறிப்பிட்ட சில பானங்கள் நச்சுக்களை இன்னும் திறம்பட வெளியேற்றும். அப்படியான பானங்கள் தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
பீட்ரூட் ஜூஸ்
1. மற்ற காய்கறிகள் போல் அல்லாமல் பீட்ரூட் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகிறது. பீட்ரூட்டில் இருக்கும் நார்ச்சத்துகள் ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது. பீட்ரூட், கேரட் மற்றும் சிறிது இஞ்சி மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து அதிலுள்ள சாற்றை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சிறுநீரகங்களை சுத்தமாக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
2. ஆப்பிள் சீடர் வினிகர் கல்லீரலை சுத்தம் செய்யும் பானத்தில் முதல் இடத்தை பிடிக்கிறது. உடலில் உள்ள pH அளவை சமநிலையில் பராமரிக்கும் வேலையையும் செய்கிறது.
ஆப்பிள் சீடர் வினிகர் செரிமானத்தை மேம்படுத்தி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து காலையில் குடிக்க வேண்டும். இது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியத்தை நிலையாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |