வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்?
மிகவும் இலகுவாகவும் ஆராக்கியமாகவும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
இதை சாப்பிட்டால் உடலுக்கு ஒரு முழுமையான ஊட்டச்சத்தை இதனால் வழங்க முடியும். இதில் வாழைப்பழம் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்களின் மூலமாக இருக்கின்றது.
இதில் உடல் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் அதிகமாக காணப்படகின்றது. இத்தனை நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை நாம் சரியான முறையில் சாப்பிடுவது முக்கியமாகும்.
இந்த பழத்துடன் சில உணவுகளை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடவதால் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அது என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்
வாழைப்பழம் & சோறு: சிலர் வாழைப்பழத்துடன் சோறு சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர். இது உடலுக்கு பக்க விளைவை ஏற்படுத்தும். ஒரு வாழைப்பழத்தில் 20கி கார்போஹைட்ரேட் உள்ளது.
200 கிராம் சாதத்தில் 60கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
வாழைப்பழம் & தயிர்: இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் அதிகம். ஆனால் இத தவறு.வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.
இதனால் உடலில் பல பிரச்சனைகள் வரும். இதனால் நீங்கள் வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் குறைந்தது 2 மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம் & தண்ணீர்: வாழைப்பழம் உடனே தண்ணிர் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இத தவறான பழக்கமாகும். வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் வரும்.
இது இல்லாமல் சளி, காய்ச்சல், இருமல் போன்றவையும் வரலாம். எனவே வாழைப்பழம் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாழைப்பழம் மற்றும் முட்டை: வாழைப்பழம் குளிர்ச்சியானது. முட்டை சூடான தன்மையுடையது. இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதன் காரணமாக வாந்தி, வாந்திபேதி போன்ற நோய்கள் வரும்.
எனவே வாழைப்பம் சாப்பிட்ட பின்னர் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நன்மை தரும். வயிற்றில் வாயுப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த இரண்டு உணவுகளையும் ஒருபோதும் சேர்த்து சாப்பிட கூடாது.
வாழைப்பழம் & அசைவம்: வாழைப்பழத்துடன் ஒருபோதும் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. இது வயிற்றில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். சாப்பிட்ட பின் சாப்பாடு ஜீரணிக்க வாழைப்பழம் சாப்பிடும் போது நீங்கள் அசைவ உணவை சாப்பிட்டு இருந்தால் ஒரு போதும் வாழைப்பழம் சாப்பிட கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |