கர்ப்ப காலத்தில் இந்த பழங்ளை தவறியும் சாப்பிடாதீர்கள்: இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவு தொடர்பிலும் உடற்பயிற்சி தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள்.
இந்த மகத்தான நிலையை அடைய ஒரு பெண் பல்வேறு தியாகங்களை செய்யவேண்டியுள்ளது. தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை கட்டுப்படுத்திக்கொண்டு இன்னொரு உயிரை உருவாக்குவதால் தான் தாய்மைக்கு எப்போதும் கௌரவம் கிடைக்கின்றது.
அந்த வகையில் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்னாசி
நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதற்குக் காரணம், இதில் காணப்படும் புரோமிலைன் என்சைம், கருப்பையை சுருங்கச் செய்யும். இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
பப்பாளி
சாதாரண மக்களுக்கு ஒரு அற்புதமான பழம், ஆனால் பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் அதிகமானகாணப்படுகின்றது.
இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.எனவே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாகக் கூட பப்பாளியை உட்கொள்ளக் கூடாது.
பலாப்பழம்
கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், பலாப்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, அதனால்தான் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |