இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை,விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்களாம். இவர்கள் தங்களின் துணையிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது பெரும்பாலும் பணமாகவும், ஆடம்பர பரிசு பொருட்களாகவுமே இருக்கும்.

அப்படி மற்றவர்களிடம் குறிப்பாக துணையிடம் அதிகமாக பொய் சொல்லும், ஏமாற்றும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

பொதுவாக அன்பான மற்றும் சிறந்த காதலர்களாக அறியப்படும் மீன ராசிப் பெண்கள், நிஜ வாழ்க்கையிலிருந்து விலகி தாங்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனை உலகில் வாழும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு உறுதிப்பாட்டின் மீது அதிக பயம் இருப்பதால் இவர்கள் பொறுப்புகளில் சிக்கிக்கொள்ள விரும்பவது கிடையாது.
இவர்கள் ஒருவரை நேரடியாக எதிர்கொண்டு உறவை முடிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றுவது போன்ற வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும். இவர்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பெரும்பாலும் காதல் என்ற நாமத்தை பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் ஒருபோதும் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவே மாட்டார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் நாடகத்தன்மைகொண்டவர்களாகவும், தங்களைச் சுற்றியவர்களின் கவனத்தைப் பெற விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் காதல் பெரும்பாலும் பணம், ஆடம்பரம் போன்ற வெளித்தோற்றம் சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் தங்களின் தேவை தீர்ந்த பின்னர் யாரை வேண்டுமானாலும் விட்டு விலக தயாராகவே இருப்பார்கள்.
மிதுனம்

மிதுன ராசிப் பெண்கள் முடிவெடுப்பதில் தயக்கம் கொண்டவர்களாகவும் தங்களின் தேவை எது என்பது குறித்து தங்களுக்குள்ளேயே குழப்பிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களின் நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும், கவர்ச்சிகரமான ஒரு வாய்ப்பு அல்லது ஆசை வந்தால் அதற்குச் சாய்ந்துவிடும் தன்மை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் மனசாட்சி தவறு என்பதை உணர்த்தினாலும், முடிவெடுப்பதில் உள்ள குழப்பம் காரணமாக எதிர்மறை செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம். இதனால் இவர்கள் காதலின் பெயரில் ஏமாற்றக்கூடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |