நரை முடியை நிலக்கரி போல கருப்பாக்கணுமா? இந்த பொருளில் ஹேர்டை செய்ங்க
வெள்ளை முடி
இப்போது மிக இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவது பொதுவான நிகழ்வாகி வருகிறது. இந்த நரைமுடி பிரச்சனையை இப்போது பலர் 20-களிலேயே சந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், உணவுமுறை மற்றும் முடி பராமரிப்பு முறையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். பலர் வெள்ளை முடியை மறைக்க, ரசாயன அடிப்படையிலான முடி சாயங்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்த செயல் முடிக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் இதற்குப் பதிலாக, வீட்டிலேயே இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான முடி சாயம் தயாரிக்க முடியும். இதன் மூலம் முடிக்கு நிறம் சேர்ப்பதோடு ஆரோக்கியமாகவும் தலைமடி இருக்கும்.
இயற்கை ஹேர் டை
வெள்ளை முடியை மறைக்க ரசாயனங்களை தவிர்த்து, இயற்கையான முடி சாயத்தை வீட்டிலேயே தயாரிக்க மருதாணி பொடி – 1 கிண்ணம் நெல்லிக்காய் பொடி – 3 ஸ்பூன் காபி பொடி – 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, தேவையான அளவு வெந்நீரில் கலந்து அடர்த்தியான பேஸ்டாக செய்யுங்கள். இந்தக் கலவையை சில மணி நேரம் ஊறவைத்து, பிறகு முடியில் தேய்த்து 1 மணி நேரம் வைத்திருக்கலாம்.
பின்னர் சுத்தமான நீரில் கழுவுங்கள். தயாரித்த ஹோம்மேட் ஹேர் டையை (முடி சாயம்) உங்கள் தலைமுடியில் மற்றும் உச்சந்தலையில் நன்றாகத் தடவ வேண்டும்.
இந்த கலவையை முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவ வேண்டும். அப்போதுதான் ஒரே மாதிரியான நிறம் கிடைக்கும்.
முடியில் ஹேர் டையை தடவிய பிறகு, 45 முதல் 50 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். இதனால் கலவை முடிக்குள் நன்றாக ஊடுருவி நிறத்தை வழங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |