நீங்கள் குடிக்கும் பாலில் இரசாயனம் கலந்துள்ளதா? இதை வைத்து கண்டுபிடியுங்க
பால் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் பால் தேவை. ஆனால் இப்போதெல்லாம் சந்தையில் கிடைக்கும் பால் தூய்மையானதாக இருப்பதில்லை.
காரணம் ரசாயனங்களின் கலப்படமாகும் . நீங்கள் எப்போதாவது போலி பால் குடிப்பீர்களா அல்லது கலப்படப் பால் குடிப்பீர்களா என்று சந்தேகித்தால் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
அந்த வகையில் நாம் சந்தையில் வாங்கும் பால் நல்ல பாலா இல்லை போலிப்பாலா என்பதை வீட்டில் சோதித்துப்பார்ப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலில் இரசாயன கலப்படம்
நீங்கள் வாங்கும் பால் வித்தியாசமான வாசனையுடன் இருந்தால் அல்லது சிறிது கசப்பான அல்லது சோப்பு சுவையுடன் இருந்தால், அதில் சோப்பு கலந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து சுத்தமான கண்ணாடி அல்லது விரலில் ஊற்ற வேண்டும். அது அடர்த்தியாகப் ஊற்றப்பட்டால் அது தூய்மையானது, ஆனால் அது தண்ணீரைப் போல மெல்லியதாகப் ஊற்றினால் அதில் தண்ணீர் அதிகம் கலந்திருக்கிறது என அர்த்தம்.
சிறிது பால் எடுத்து, அதில் சோயா பீன்ஸ் அல்லது துவரம்பருப்பு சேர்த்து சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். நிறம் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறினால், அதில் யூரிக் கலந்திருக்கிறது.
இதன் பின்னர் பாலில் சில துளிகள் அயோடின் கலக்க வேண்டும். இப்போது பால் நீல நிறமாக மாறினால் அது ஸ்டார்ச் கலப்படம் செய்யப்பட்டதாகும்.
தூய பாலில் அத்தகைய நிற மாற்றம் ஏற்படாது. பின்னர் கொஞ்சம் பால் எடுத்து, அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அப்படி கலக்கும் போது நுரை வருவது போல அதில் நுரை உருவாகத் தொடங்கினால் அது அதிகப்படியான சோப்பு கலந்திருக்கிறது என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த கலப்பட பாலை குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே நீங்கள் பால் வாங்கி அதை பெரியவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முதல் சோதித்து பார்த்து கொடுங்கள். அப்படி இல்லை எனில் நம்பந்தகுந்த பாலை வாங்கி உபயோகப்படுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |