சாதம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என வாழும் நாடு எது தெரியுமா?
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் சாதம் இல்லாமல் ஒரு நாளை முடிக்கமாட்டார்கள்.
இதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும் மூன்று வேளையும் சாப்பிடும் பொழுது தொப்பை போடுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
இதனால் டயட்டில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வைத்து தான் சாதம் எடுப்பார்கள். தயிர் சாதம், பூண்டு சாதம், வெள்ளை சாதம், சிவப்பு அரசி சாதம் என பல வகைகளில் சாதத்தை எடுத்து கொள்கிறார்கள்.
தென்னிந்தியர்கள் தினமும் சாதம் எடுத்து கொள்வதால் அதிகமான அரிசி சாப்பிடும் நாடு இந்தியா என பலரும் கூறி வருகிறார்கள். அது உண்மையல்ல.
அரிசி சாதத்தில், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் (\(B\) வைட்டமின்கள், இரும்பு, மாங்கனீசு, ஜிங்க் மற்றும் நார்ச்சத்து உள்ளன. மற்ற தானியங்களை விட அரிசி மக்களால் விரும்பி சாப்பிடும் தானியமாக பார்க்கப்படுகிறது. இது பழுப்பு, கருப்பு, சிவப்பு அரிசி ஆகிய வகைகளில் பார்க்கலாம்.

அந்த வகையில், அதிகம் சாதம் சாப்பிடும் நாடு எது என்ற விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அரிசி சாதம் சாப்பிடும் நாடு எது?
உலகிலேயே அதிகம் அரிசி விளைவிக்கும் நாடும் இந்தியா அல்லது. இவற்றில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான். உலக அளவில் 30% அரிசியை சீனா உற்பத்தி செய்கிறது. அத்துடன் அரிசியை உணவாக அதிகமாக சாப்பிடும் மக்கள் வாழும் நாடும் சீனா தான்.

அவர்களின் உணவுகளில் சாதம் இல்லாமல் இருக்காது. சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசியை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா, மூன்றாவது இடத்தை இந்தோனேசியா பிடிக்கிறது.
அதன் பின்னர், நான்காவது இடத்தை வங்கதேசம், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |