ஜீன்ஸ் பேண்டில் கறை படிந்தால் எவ்வாறு நீக்குவது? ஆனால் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
ஜீன்ஸ் பேண்டில் ஏற்படும் கறைகளை எவ்வாறு நீக்க முடியும் என்பதையும், ஜீன்ஸை எவ்வாறு துவைப்பது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜீன்ஸ்
பொதுவாக இன்றைய இளைஞர்கள், சிறுவர்கள் அனைவரும் ஜீன்ஸ் பேண்டை தான் விரும்பி அணிகின்றனர். ஜீன்ஸ் அணிந்தால் ஒரு லுக் கிடைப்பது நன்றாகவே தெரியும்.
அதே போன்று ஜீன்ஸ் பேண்டினை 3 முதல் 4 நாட்கள் வரையும் போட்டுக்கொள்ளலாம். ஏனெனில் இதில் அழுக்கு பட்டாலும் வெளியே அவ்வளவாக தெரியாது.
ஜீன்ஸை துவைப்பது மற்றும் அதில் கரை ஏதும் பட்டால் அதனை நீக்குவது என்பது மிகவும் கடினமாகும். தண்ணீரில் நனைத்த பின்பு அதிக கனமாக இருப்பதால் துவைப்பதற்கு அதிகமான சிரமம் ஏற்படும்.

அவ்வாறு துவைத்தால் கூட கல்லில் நன்றாக போட்டு அடித்து காய போட்டுவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் ஜீன்ஸ் கலர் மங்கிவிடும்.
தற்போது ஜீன்ஸ் பேண்ட்டில் படியும் மஞ்சள், மசாலா, ரத்தம் போன்ற கறைகளை எவ்வாறு நீக்குவது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜீன்ஸில் உள்ள கறைகளை எவ்வாறு நீக்குவது?
பெண்களும் அதிகமாக ஜீன்ஸ் பயன்படுத்திவரும் நிலையில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு பேண்ட்டில் பட்டு கறையாக இருக்கும். கறை பட்டதும் அதனை அலசிவிட்டால் கடினமாக இருக்காது. ஆனால் கறை கடினமாகிவிட்டால் சோடா மற்றும் உப்பு சேர்த்து கறைகளில் வைத்து தேய்த்தால் போதும். மற்றொரு டிப்ஸ் பௌல் ஒன்றில் உப்பு சேர்த்து அதில் சிறிதளவு சோடா சேர்த்து அதனை கறை இருக்கும் இடத்தில் தோய்த்தால் போதும்.

image: shutterstock
இதுவே மஞசள் மற்றும் மசாலா கரையினை நீக்க பௌல் ஒன்றில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் போன்று குழைத்து, இந்த பேஸ்ட்டை டூத் பிரஷ்ஷில் எடுத்து கரை உள்ள இடங்களில் தேய்த்து அலசினால் போதும்.
லிப்ஸ்டிக், மேக்கப் கிரீம் கறைகளுக்கு ஷேவிங் கிரீம்களை தடவி பிரஷ்ஷை தண்ணீரில் நனைத்து தேய்த்தால் போதும்.
எண்ணெய் கறைகள் ஏற்பட்டால், வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இவற்றினை நீரில் கலந்து ஜீன்ஸை அதில் ஊற வைத்து நன்றாக தேய்த்து எடுத்தால் கரை நீங்கிவிடும்.

எவ்வாறு துவைப்பது?
பெட்ஷீட் போன்று ஜீன்ஸை சுடுநீரில் ஊற வைத்து துவைக்காமல் வழக்கமான நீரில் துவைக்கவும்.
உட்புறமாக திருப்பிப் போட்டு துவைப்பது நல்லது. அடிக்கடி துவைப்பது கூடாது.
வியர்வை நாற்றம் அடிக்காமல் வெயிலில் அவ்வப்போது போட்டு எடுத்து வைக்கவும்.
வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தால் மிக விரைவில் பேண்ட் வீணாகிவிடும்.

image: istock
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |