இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனியின் ஆசியால் வெற்றிகளை குவிப்பார்கள்... நீங்க எந்த திகதி?
எண்கணணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என நம்பப்படுகின்றது.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.
எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது.
அந்த வகையி்ல் குறிபிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் மீது சனிபகவான் தனது ஆசியை பொழிவார் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
நீதியின் கடவுளாக திகழும் சனியின் ஆசி இருந்தால் வாழ்வில் செல்வ செழிப்புக்கும் வெற்றிகளுக்கும் பஞ்சமே இருக்காது.
சனியின் ஆசிபெற்ற எண் 8
எந்தவொரு மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு சனிபகவானின் ஆசிர்வாதம் இயல்பாகவே இருக்கும்.
ஆனால் இந்த எண்களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் மீது பெரிதும் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் தங்களின் உழைப்பின் மீது மட்டுமே அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இருப்பினும் அவர்களின் இந்த குணம் இவர்களை மேலும் சனிபகவானின் விருப்பத்திற்குரியவர்களாக மாற்றுகின்றது. இவர்கள் வாழ்வில் வெற்றியை இலகுவில் அடைவதற்கு அதிர்ஷ்டம் பெரிதும் துணைப்புரிகின்றது.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒருபோதும் பணத்திற்கு கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் குறுகிய காலத்திலேயே சனியின் ஆசியால் வெற்றிகளை குவிப்பார்கள். நிதி ரீதியில் அசுரை வளர்ச்சியை சனி பகவான் இவர்களுக்கு கொடுப்பார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |