இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுவதாகவும், எண்களால் ஒருவரை வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண் கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறும் ஒரு பழங்கால சாஸ்திர முறையாக அறியப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கோடிகளில் பணம் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாகவும் பணத்தை நிர்வகிப்பதிலும் கில்லாடிகளாகவும் இருப்பார்கள்.
அப்படி கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்தவர்கள் எந்தெந்த திகதிகளில் பி்றந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1 (எந்த மாதமும் 1, 10, 19 மற்றும் 28)

இந்த எண்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தை நிர்வதிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் எண் பிரகாரம் அனைத்த கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனின் முழுமையான ஆசி இவர்களுக்கு இருப்பதால் இயற்கையாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
மேலும் இவரர்கள் தைரியமானவர்கள், லட்சியம் கொண்டவர்கள், அவர்கள் வெற்றிபெறவும் அதை அடையவும் கடினமாக உழைக்ககூடியவர்களாக இருப்பார்கள்.
இந்த எண்களில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடிகளில் பணத்தை சம்பாதித்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துவார்கள்.
எண் 3 (3, 12, 21 மற்றும் 30)

இந்த திகதிகளில் பிறந்தவர்களிடம் நிதி முகாமைத்துவ ஆற்றல் அபரிமிதமாக இருக்கும். இவர்கள் கையில் இருக்கும் பணத்தை எந்த துறையில் முதலீடு செய்தால் லாபம் காணலாம் என்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தொழில் விடயத்தில் ஒரு போதும் தங்களின் தனிப்பட்ட உணர்வுகளை இணைத்து குழப்பிக்கொள்ளவே மாட்டார்கள்.
இவர்களி்ன் இந்த தனித்துவமான குணங்கள் காரணமாக இளம் வயதிலேயே அவர்களின் வயதுக்கு மீறிய சொத்துக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
எண் 4 (பிறப்பு 13, 22 மற்றும் 31)

இந்த எண்களில் பிறந்தவர்கள் நிதி சுதந்திரத்தை அனுபவிக்கவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு பணத்தை இரட்டிப்பாக்கும் கலை நன்றாகவே தெரிந்திருக்கும். கையில் இருக்கும் சிறிதளவு பணத்தை கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு நிலையை அடைய வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள் என்றால், அதனை எந்த நிலையிலும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். இவர்களிடம் இயல்பாகவே பணத்தை பெருகச்செய்யும் அபரிமிதமான ஆற்றல் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |