இந்தியாவின் top 3 வங்கிகள் வெளியிட்டுள்ள சிறப்பு நிரந்தர வைப்பு திட்டங்கள்... என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் முன்னணியில் இருக்கும் வங்கிகளாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகிய மூன்று வங்கிகளும் சிறப்பு நிரந்தர வைப்பு திட்டங்களை அட்டகாசமான வட்டி விகிதங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளன.
தங்களின் வங்கிகளின் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள குறித்த திட்டங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அம்ருத் விருஷ்டி சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டம் SBI இன் அம்ருத் விருஷ்டி திட்டம் 444 நாட்களுக்கு 7.25 சதவீதம் என்ற அதிக வட்டி விகிதத்தை கொடுக்கின்றது.
இந்த திட்டம் ஜூலை 15, 2024 முதல் அமலாக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிகமாக 0.50 சதவீதம் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பு நபர்கள் SBI வங்கி கிளைகள், YONO SBI, YONO Lite (மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள்) மற்றும் SBI இன்டர்நெட் பேங்கிங் போன்ற பல்வேறு விசேட வசதிகள் செய்யப்பட்ட முறையில் வங்கிச் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான இறுதி திகதி மார்ச் 31, 2025 ஆக நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நாங்கள் அம்ருத் விருஷ்டி என்ற புதிய டேர்ம் வைப்புத் திட்டத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்களுடைய மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் செல்வத்தை பெருக்குவதற்கு உதவும் இந்த முயற்சி SBI வங்கியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது. என SBI வங்கி குறிப்பிடுகின்றது. 444- நாள் வைப்பு - 7.25% ஆகும்.
பேங்க் ஆஃப் பரோடா
மான்சூன் டமாக்கா சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பேங்க் ஆஃப் பரோடா மான்சூன் டமாக்கா சிறப்பு நிரந்தர வைப்பு திட்டத்தை 2 வேறுப்பட்ட கால அளவுகளில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் அடிப்படையில் 333 நாட்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.15 சதவீத வட்டியும், 399 நாட்களுக்கு 7.25 சதவீத வட்டியும் வழங்கப்படுகின்றது. மேலும் மூத்த குடிமக்களுக்கு வழக்கம் போலவே கூடுதலாக 399 நாட்கள் திட்டத்திற்கு 7.90 சதவீத வட்டியை ஒரு ஆண்டுக்கு கொடுக்கின்றது.
குறித்த திட்டத்தை ஆன்லைன் மற்றும் கிளை சார்ந்த அப்ளிகேஷன்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். 333- நாட்கள் டெபாசிட் - 7.15% 399- நாட்கள் டெபாசிட் - 7.25 % ஆகும்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 4 வெவ்வேறு வைப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த திட்டங்கள் 200 நாட்கள் முதல் 777 நாட்கள் வரையிலான கால அளவை கொண்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றது.
உதாரணமாக, 777 நாள் வைப்பு திட்டத்திற்கு 7.25% வட்டி ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படுகின்றது. பல்வேறு முதலீட்டு திட்டங்கள் கொண்ட முதலீடாளர்களை ஈர்க்கும் இந்த திட்டத்தை பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா அறிமுகம் செய்துள்ளது. 200- நாள் டெபாசிட் - 6.9% 400- நாள் டெபாசிட் - 7.10% ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |