Night Shift வேலை பார்க்கிறீங்களா? அப்போ இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க
அலுவலகத்தில் இரவு வேலை செய்யும் நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, வெளிநாட்டு பணியாளர்களாக உள்நாட்டில் அநேகர் வேலை செய்து வருகின்றனர்.
இதனால் இரவு நேரத்திலும் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இளைஞர்கள் பெரும்பாலான நாட்களில் நைட் ஷிப்ட் பார்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
இங்கு நைட் ஷிப்ட் பார்ப்பவர்கள் ஆரோக்கியத்தினை தக்க வைத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
நைட் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு சில டிப்ஸ்
இரவு நேர வேலை செய்யும் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் கனமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செரிமான பிரச்சினை ஏற்படுத்தும்.
இரவு நேர வேலை செய்பவர்களுக்கு தூக்கம் மிகவும் ஆகும். இரவு நேர வேலைக்கு செல்லும் நபர்கள் பகலில் நன்றாக தூங்குவது அவசியமாகும். இவ்வாறு இருந்தால் மட்டுமே எந்தவொரு நோய்வாய்ப்படாமல் உங்களது வேலையில் கவனம் செலுத்த முடியும்.
அதிக நேரம் கணினி திரையின் முன்பு அமர்ந்திருந்தால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலை பாதிக்கும். ஆதலால் இரவு நேர வேலை செய்பவர்கள் அவ்வப்போது சிறிது ஓய்வு எடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பசி எடுக்கும் போது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
உடம்பிற்கு தேவையான தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும். இரவு நேரம் வேலை செய்பவராக இருந்தால் உடல் நீரோற்றமாக இருக்க வேண்டும். ஆகவே சரியான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |