தன் கழிவுகளை தானே சாப்பிடும் மிருகங்கள்- அதற்குப்பின்னால் இப்படியொரு காரணம் இருக்கா?
தனது கழிவுகளை தானே சாப்பிடுவது என்பது வெறுக்கத்தக்க செயலாக பார்க்கப்படுகின்றது.
ஆனால் மனிதர்களை தவிர இந்த உலகில் வாழும் சில விலங்குகள் இப்படியான வேலைகளை செய்கிறது.
இது போன்று விலங்குகள் நடந்து கொள்வது பொதுவானது மட்டுமல்ல, பல உயிரினங்களின் உயிர்வாழ்வதற்கான வாழ்வாதாரமாகவும் பார்க்கப்படுகின்றது.
கழிவுகளை சாப்பிடும் செயலை கோப்ரோபேஜியா(Coprophagia) என அழைப்பார்கள்.
இந்த நடைமுறையால் விலங்குகள் முதல் முறையாக முழுமையாக ஜீரணிக்க முடியாத ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள அனுமதிக்கிறது.
இது பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Coprophagia என்றால் என்ன?
கோப்ரோபேஜியா என்பது தன்னுடைய மலத்தை தானே உட்கொள்வதைக் குறிக்கிறது. இதனை உலகிலுள்ள பல விலங்குகள் செய்கிறது. இந்த செயற்பாடு மனிதர்களுக்கு ஆரோக்கியமற்றதாகவும், வினோதமாகவும் தோன்றினாலும் விலங்குகளுக்கு செரிமான செயல்முறையின் இயற்கையான மற்றும் அவசியமான பகுதியாக உள்ளது. இந்த செயன்முறை இயல்பானது என் ஆய்வுகள் கூறுகின்றன.
Coprophagia-வை பின்பற்றும் மிருகங்கள்
- முயல்கள்
- கொறித்துண்ணிகள்
- நாய்கள்
- மலை நீர்நாய்கள்
- குட்டி யானைகள்
- நீர்யானை கன்றுகள்
- கொரில்லாக்கள்
- ஒராங்குட்டான்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |