இந்த ராசி ஆண்கள் தாயை தேவதைப்போல் பார்த்துக்கொள்வார்களாம்... உங்க ராசி என்ன?
ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்க்கையிலும் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தாயின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்களாகவும் தாயின் சொல்லுக்கு கட்டுப்படும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி தாயை ஒரு தேவைதைபோல் நடத்தும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் எதார்த்தமான குணம் கொண்டவர்களாகவும் பெற்றோர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் குறிப்பாக தாயின் சொல்லே மந்திரம் என வாழுவார்கள். தாயின் கண் அசைவுகளையும் கூட புரிந்து நடந்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
சிறந்த நிதி முகாமைத்துவ ஆற்றலும் குடும்ப பொறுப்பும் கொண்ட இவர்கள் தாயை இறுதிவரையில் சகல வசதிகளுடனும் வாழ வைக்க வேண்டும் என்று பாடுபடுவார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள்.இவர்களுக்கு அம்மாவின் மீது சற்று அதிக பாசம் எப்போதும் இருக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் அக்கறையுள்ள மற்றும் அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாய்கு ஏதாவது என்றால், மிகவும் நொத்து போய் விடுவார்கள்.
அவர்கள் தங்களின் பெற்றோருடன் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
இவர்களிடம் தாய் வெளிப்படையாக சொல்லாவிடினும் இவர்களின் மனதை புரிந்துக்கொண்டு இவர்களின் ஆசையை நிறைவேற்றும் அளவுக்கு தாயுடன் சிறந்த உணர்ச்சி பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் புத்திக்கூர்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ஆண்கள் பொதுவாக குடும்ப பொறுப்பை சொல்லாமலேயே தங்களின் தோலில் ஏற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தங்களின் தேவைகளை புறக்கணித்துவிட்டு வாழும் தியான உள்ளம் கொண்டவர்கள்.
குறிப்பாக வாழ்வின் இறுதிவரையில் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் ஒரு நல்ல மகனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
