உலகின் முதல் மனிதன் எந்த நாட்டில் உருவானார் தெரியுமா?
உலகில் மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகளாகி வளர்ந்து வருகின்றன.
பூமியில் மனித இனம் தோன்றிய போது இருந்த மனிதர்கள் தற்போது இல்லை, மாறாக மனிதர்கள் பல்வேறு பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது உலகில் 195 நாடுகள் உள்ளன, ஆனால் உலகின் முதல் மனிதர் எந்த நாட்டில் உருவாகியிருப்பார் என யாருக்கும் பெரிதாக தெரியாது.
உலகின் முதல் மனிதர் எந்த இடத்தில் பிறந்திருப்பார் என பல நூற்றாண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது. சில ஆதாரங்கள் ஆப்பிரிக்கா நாட்டில் மனிதர்களின் பிறப்பிடம் என்றும், முதல் மனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தின் சில பகுதிகளில் பிறந்திருப்பார் என்றும் கூறுகின்றன.
இருந்த போதிலும் சில ஆதாரங்கள் உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களை மேற்கோள் காட்டுகின்றன. இருப்பினும், மனிதகுல வரலாறு குறித்து இன்னும் தீர்க்கமான பதில் இல்லை.
அந்த வகையில், இந்த உலகில் உருவான முதல் மனிதர் எந்த நாட்டில் பிறந்திருப்பார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பதிவில் பார்க்கலாம்.
மனிதன் உருவானது எங்கு?
மனிதகுலத்தின் வரலாறு பற்றி தேடும் பொழுது “ஏதேன் தோட்டம்” பற்றி தான் கூறியிருப்பார்கள். பூமியில் உள்ள ஏதேன் தோட்டம் பற்றி புனித புத்தகமான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இங்கு தான் முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் வாழ்ந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இருவரிடையே நீண்ட காலமாக விவாதம் நடந்துக் கொண்டிருக்கிறது.
டாக்டர் கான்ஸ்டான்டின் போரிசோவ் கடந்த 2024 இல் மேற்கொண்ட ஆய்வின்படி, “ நைல், யூப்ரடீஸ், டைக்ரிஸ் மற்றும் சிந்து நதிகளை இணைக்கும் ஏதேன் தளமாக எகிப்தை கூறினார். இருந்த போதிலும் உலகத்திலுள்ள ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஆப்பிரிக்க கண்டத்தை மனிதகுலம் தோன்றியது முதல் மனிதன் பிறந்த இடம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள தென்னாப்பிரிக்காவை மனிதகுலத்தின் தொட்டில் என்கிறார்கள். ஏனெனின் இங்கு எத்தியோப்பியாவின் என அழைக்கப்படும் இடத்திலுள்ள “ஓமோ” பள்ளத்தாக்கில் மிகப் பழமையான மனித புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றை நிரூபிப்பதற்கான மிகப்பெரிய சான்றாகக் கருதப்படும் இது, மனிதர்கள் உருவான இடங்களில் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. எனவே மனிதன் உருவானக்கதையில் பல புரியாத மர்மங்கள் இருந்தாலும், இந்த கோட்பாடுகள் பண்டைய நூல்களும் நவீன அறிவியலுடன் ஒப்பிட்டு இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |