அதிர்ஷ்டத்தை பெற வீட்டில் பாம்பு செடியை எங்கு வைக்கணும் தெரியுமா?
பொதுவாகவே தாவரங்கள் வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவுகின்றன. அதோடு செடிகள் நமக்கு நல்ல சுத்தமான காற்றினை வழங்குவதுடன், வீட்டில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகின்றது.
வீட்டை அலங்கரிக்கும் பலவிதமான தாவரங்கள் இருந்தாலும் வாலஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில தாவரங்கள் அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் பாம்பு செடி முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்த வகையில் மணி பிளான்ட்டுக்கு அடுத்தப்படியாக அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பாம்பு செடியை வீட்டல் எந்த திசையில் வைக்க வேண்டும். அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் எங்கு வளர்க்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அதிர்ஷ்டத்திற்காக பாம்பு செடியை வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால் பாம்பு செடியை சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
வாஸ்துவில் குளியலறை மற்றும் படுக்கை அறையில் வளர்க்க ஏற்ற செடியாக இது கருதப்படுகிறது. மேலும் இந் செடியை வீட்டின் ஹாலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம். வீட்டினுள் பாம்பு செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டிற்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும்.
எப்போதும் இந்த செடியை மற்றவர்களின் பார்வையில் படாதவாறு வைக்கக்கூடாது. இப்படி மற்றவர்களின் பார்வையில் படும்படி வைக்கும் போது கண் திருஷ்டி நீங்கி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாம்பு செடியை வீட்டின் கிழக்கு, தெற்கு மற்றம் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இந்த திசையில் இச்செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |