அட இது தெரியாம போச்சே! இறாலுக்கு இதயம் எங்குள்ளதுன்னு தெரியுமா..?
பொதுவாகவே அசைவ உணவை விரும்புவோரின் பட்டியலில் இறால் முக்கிய இடம் பிடித்துவிடும். இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்த காணப்படுகின்றது.
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராகவும் செயற்படுகின்றது.
கடலில் உயிரிழந்த உயிரினங்களை சாப்பிட்டே இறால்கள் உயிர்வாழ்கின்றன.இறால்கள் பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு உணவாகவும் இருக்கின்றன.
இறால்கள் பவள இறால், பாறை இறால், கல் இறால், புலி இறால் மற்றும் மிதியடி இறால் என பல வகைகளில் இருக்கும் அதே நேரம் அவற்றின் தோற்றமும் பல விதமமாக இருக்கும்.
இறாலிற்கு முதுங்கெலும்பு இருப்பதில்லை மாறாக எக்ஸ்சோ ஸ்லிட்டன் என வெளிப்புற எலும்பு மாத்திரமே காணப்படும்.
இறாலின் இதயம் எங்குள்ளது?
இதன் காரணமாகவே இறாலில் உடல் பாதுக்காக்கப்படுகிறது. இறால் பற்றி எல்லா அறிந்து வைத்திருக்கும் பலருககும் இறாலின் இதயம் எங்கு இருக்கின்றது என்பது தெரியாமல் இருக்க கூடும். காரணம் இறாலிற்கு இதயம் தலைப் பகுதியில் தான் அமைந்திருக்கும்.
இறாலின் தலை அதன் வயிற்றுப் பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு செபலோதோராக்ஸ் (cephalothorax) என்று பெயர்.
அதனால் தான் இறால்களினால் தண்ணீரில் நீந்த முடிகிறது. இறாலின் தலையை பாதுகாப்பதற்காக காராபேஸ் என்ற ஒரு கவசமும் காணப்படுகின்றது.
அதன் பக்கத்தில் தான் இறாலின் இதயம் அமைந்திருக்கும். இப்போது. இறாலின் மூளை எங்கே இருக்கும் என்ற கேள்வி கட்டாயம் வரும். இறாலின் மூளை மிக சிறிய அளவில் இருக்கும். அதுவும் இறாலின் இதயத்துக்கு அருகில் தான் காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |