இந்தியாவில் தங்கம் எங்கு விலை குறைவாக கிடைக்கும் தெரியுமா?
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் தங்கம் மிகவும் விலை குறைவாக எடுக்கலாம் எனப்படுகின்றது.
தங்கம்
இந்தியாவில் தற்போது தங்கத்தை ஆடம்பரத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு பாதுகாப்பான முதலீட்டாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களுக்குள்ளேயே தங்கத்தின் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விலையில் விற்கப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளது.
அந்த வகையில் கேரளா மாநிலத்தில் இந்தியாவின் மற்றைய இடங்களை விட தங்கம் விலை குறைவாக கிடைக்கிறது. கேரளாவை இந்தியாவில் தங்கத்தின் சொர்கம் என அழைப்பார்கள்.

இதற்கு பல காரணங்கள் உள்ளது. கேரளாவில் தான் பல சர்வதேஷ சந்தைகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இது நேரடியான இறக்குமதி ஆகும்.
இதனால் இடையில் இருக்கும் தரகருக்கான கமிஷன் குறைகிறது. கேரளாவில் அதிகமான நகைக்கடைகள் காணப்படுகின்றது.
இதனால் வாடிக்கையாளர்களை கவர தங்கத்தின் லாப நோக்கை குறைத்து தங்கத்தை விலை குறைவாக விற்கின்றனர்.

இந்தியாவில் மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு தங்கம் விமானம் அல்லது ரயிலில் கொண்டு செல்ல சட்டப்படி தடை இல்லை. ஆனால் அதற்கான அசல் ரசீது அவசியம்.
வருமான வரி விதிப்படி, திருமணமான பெண் 500 கிராம், திருமணமாகாத பெண் 250 கிராம், மற்றும் ஆண் 100 கிராம் வரை தங்க நகைகளை ஆதாரமின்றி வைத்திருக்கலாம்.

அதற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் வருமான ஆதாரம் வேண்டும். தங்கக் கட்டிகள் அல்லது நாணயங்களாக கொண்டுவரும்போது கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும்.
2 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் பான் கார்டு விவரங்கள் ரசீதில் உள்ளடக்கப்பட வேண்டும். நிபுணர்களின் கூற்றுபடி தங்கத்தின் விலை இந்த 2026ம் ஆண்டு குறையும் என கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |