brinjal fry: சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் பொடி கத்தரிக்காய் வறுவல்! இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான காய்கறி வகைகளுள் கத்தரிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து செரிந்து காணப்படுவதால், நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் ஆற்றலும் கத்தரிக்காய்க்கு உண்டு. மேலும் வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் ஆகிய பிரச்சினைகளுக்கு கத்தரிக்காய் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த கத்தரிக்காயில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பி சாப்படும் வகையில் எவ்வாறு அசத்தல் சுவையில் பொடி கத்தரிக்காய் வறுவல் செய்வதென இந்த பதிவில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்
பொடிக்கு தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மல்லி - 2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
வரமிளகாய் - 8
கறிவேப்பிலை - 2 கொத்து
வறுத்த வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
வறுவலுக்கு
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கத்திரிக்காய் - 350 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மல்லி, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிதமாக வறுத்து இறக்கி குளிரவிடவேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு கத்திரிக்காயை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி, ஒரு பாதிரத்தில் போட்டு, முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்த ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து கத்திரிக்காயை நன்கு வேகவிட வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து கத்திரிக்காயை நன்கு கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7 நிமிடங்கள் வரையில், வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
கத்திரிக்காய் நன்றாக வெந்ததும், அதில் பெருங்காய் தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடியில் பாதியை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட்டு, 2-3 நிமிடங்கள் வரையில் வேக வைத்து இறக்கினால், அவ்வளவு தான் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுவையான பொடி கத்திரிக்காய் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |