ஜீன்ஸ் பேண்ட்டை துவைக்காமல் எத்தனை நாள் அணியலாம்? இந்த தவறை செய்யாதீங்க
ஜீன்ஸ் பேன்ட் உள்ளிட்ட அனைத்து வகையான பேண்ட்களையும் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடை என்பது ஒரு மனிதரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஒரு நபரை மதிப்பிட முதலில் பார்ப்பது அவரது உடையாகத் தான் இருக்கின்றது. ஒருவரின் ஆளுமையையும் ஆடை வெளிக்காட்டவும் செய்கின்றது.
இன்றைய காலத்தில் பலவிதமான உடைகள் வந்துள்ள நிலையில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. நைலான், காட்டன், சில்க், ஜீன்ஸ், கார்கோ என்று பேண்ட் வகைகள் காணப்படுகின்றது.
சில வகை ஆடைகளை சுவைக்கும் போது பல விதிமுறைகள் உள்ளது. ஆம் அடித்து துவைக்காமல் ட்ரைவாஷ் மட்டுமே செய்ய வேண்டும். சில ஆடைகளை இரண்டு மூன்றுமுறை அணிந்துவிட்டு துவைத்தாலும் ஒன்றும் ஆகாது.
ஆனால் இன்று பலரும் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை துவைக்காமல் அதிக நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜீன்ஸ் பேண்ட்டை துவைக்காமல் எத்தனை நாள் பயன்படுத்தலாம்?
ஜீன்ஸ் பேண்ட் துவைக்காமல் போடும் போது நீங்கள் காலநிலை மற்றும் வெப்பநிலை மாற்றங்களை கவனிக்க வேண்டும். அதிகமான வியர்வை, அழுக்கு ஏற்பட்டிருந்தால் தாமதிக்காமல் தினமும் துவைத்துவிட வேண்டும்.
ஜீன்ஸ் பேண்ட்டை கழற்றி போடும் போது அதனை உட்பக்கமாக எடுத்து சற்று உலரவைத்து விட்ட பின்னே அணிய வேண்டும். அலுவலக பணியில் உள்ளவர்கள் 3 முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை துவைக்கலாம்.
ஜீன்ஸ் அணிந்து நடைபயிற்சி மற்றும் உடை பயிற்சி மேற்கொள்பவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒருமுறை துவைத்துவிட வேண்டும்.
தீவிர உடற்பயிற்சி, அதிக வேலைகள் பார்ப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் துவைத்துவிட வேண்டும். அதுவே ஏதாவது கரை படிந்திருந்தால் உடனே துவைத்துவிட வேண்டும். ஆனால் இவ்வாறு துவைக்காமல் பயன்படுத்தப்படும் ஜீன்ஸை அணிவதால் பக்கவிளைவுகளும் ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற பேன்ட்கள்
லினன் பேண்ட் (linen pant) வகைகளை இரண்டு முறை அணிந்துவிட்டு துவைத்து விடவும்.
காட்டன் வகையான பேண்ட்கள் சுருங்கும் தன்மை கொண்டதால் அதனை 2 அல்லது மூன்று முறை அணிந்த பின்பு துவைத்துவிடவும்.
பாலியஸ்டர் பேண்ட்களை 5 முதல் 7 முறை பயன்படுத்திய பின்பு துவைக்கலாம்.
கம்பளி பேண்ட் வகைகளை 5 முதல் 20 தடவை பயன்படுத்திய பின்பு துவைத்தாலும் இதன் தரம் மாறாமல் அப்படியே இருக்கும்.
சில்க் துணிகளை எப்பொழுதும் அடித்து துவைக்காமல், அழுக்கை நீக்குவதற்கு ட்ரை க்ளீனிங் மட்டுமே செய்யவும்.
பேன்வாஸ் பேண்ட்களை நீங்கள் பயன்படுத்தும் முறைக்கு ஏற்ப துவைத்துக் கொள்ளலாம். தினமும் துவைப்பதற்கு தேவையில்லை.
விளையாட்டு துறையில் உள்ளவர்கள் உபயோகம் செய்யும் ஜெர்சி பேண்ட் (Jersey) ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னும் துவைக்க வேண்டும்.
ஆடைகளை முடிந்த அளவு துவைத்து அணிவதற்கு பழகிக்கொண்டால் தோல் அரிப்பு மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆகவே ஆடைகளை எப்பொழுதும் சுத்தமாக அணிவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |