இப்படியான சூழ்நிலையில் குளிப்பது நல்லதல்ல - ஆயுர்வேதம் கூறும் உண்மை
நாம் தினமும் குளிப்பது நல்லது. நம்மை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள குளிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளோம். அதுவும் இப்போது கோடை காலம்.
சுட்டெரிக்கும் இந்த வெயிலில் எல்லோரும் குளிக்க தங்கள் நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதில் தான் ஒரு புரிதல் வேண்டும். குளிப்பது நல்லது தான்.
ஆனால் எப்போது குளிக்க வேண்டும் என நமக்கு தெரிந்திருப்பது அவசியம். அப்போது தான் சில பிரச்சனைகளில் இருந்து நம்மால் மீண்டு வர முடியும்.
இதற்கு நாம் ஆயுள்வேதத்தில் கூறும் நல்செய்தியை எடுத்துக்கொள்ளலாம். இந்த பதிவில் இதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
ஒரு நாளில் எப்போது குளிப்பது நல்லது?
குளிப்பதற்கு பல விதிகள் உள்ளன. ஆயுர்வேதத்தின்படி, ஒரு நாளின் சில நேரங்களில் குளிப்பது நல்லதல்ல. அது நன்மைகளுக்குப் பதிலாக, பல உடல்நல தீமைகளை கொண்டு வரும்.
வெளியில்போய் வியர்வை வந்த பின்னர் குளிக்க கூடாது- வெயிலில் வெளியில் இருந்து திரும்பி வீட்டிற்கு வரும்போது அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க தோன்றும்.
நாம் வெளியில் இருந்து வரும்போது நமது உடல் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உடனடியாக குளித்தால் , நமது உடல் வெப்பநிலை சட்டென குறையும்.
இதனால் உடல் இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளை விரைவாக அனுபவிக்க நேரிடும். இதன் காரணமாக நமக்கு உடல்நலம் மோசமடைந்து காய்ச்சல் அல்லது சளி வரும்.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் எப்போது குளிப்பது?- சிலருக்கு இரவில் தூங்க முன் குளிப்பது ஒரு பழக்கமாக இருக்கும். இது தீங்கு என்பது யாருக்கும் தெரியாது.
படுக்கைக்கு செல்ல முன் குளித்தால் உடல் நலத்தை இது பாதிக்கும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிப்பதால் உங்கள் உடல் வெப்பநிலை குறையும்.
இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே, தூங்குவதற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்னர் குளித்துவிட்டு தூங்குவது உடலுக்கு நல்லது.
காய்ச்சல் இருக்கும்போது குளிக்க கூடாது- காய்ச்சல் இருக்கும் போது சிலர் குளிக்க மாட்டார்கள். ஆனால் சிலர் குளிக்க ஆசைப்படுவார்கள்.
ஆயுர்வேதத்தின்படி, உடலில் வெப்பநிலை குறையும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் குளிக்கும்போது இது நமது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை உண்டாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
