ஆக்டோபஸ்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுமா? அப்போ என்ன பண்ணும்னு பாருங்க
ஆக்டோபஸ் ஒன்று கடலுக்கு அடையில் அதன் ஓட்டுக்குள் போய் அதன் கால்களால் அதனை மூடிக்கொள்ளும் அரிய காட்சியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினமான பார்க்கப்படுகின்றது. இதனால் மனிதர்களை அடையாளம் காண முடியுமாம்.
ஆக்டோபஸ்சின் உணர்ச்சிக்கொடுக்குகளின் எண்ணிக்கை எட்டு என்பதால்தான் அக்டோபர் 8 ஆம் திகதி, உலக ஆக்டோபஸ் தினமாக கொண்டாடப்படுகின்றது. உலகில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வகைகளில் இவை காணப்படுகின்றது.
பெரும்பாலும் அவை கடல்களையும், கடற்பரப்புகளையும் உறைவிடமாகக் கொண்டிருப்பதுடன் நண்டுகள், இறால்களை என்பவற்றை இரையாக உட்கொள்கின்றன.
பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஆக்டோபஸ்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆக்டோபஸ் இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஆக்டோபஸ்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அவை பொதுவாக வெளியிடத்தை பார்க்க விரும்புவதில்லை. இவ்வாறு மன அழுத்தத்தில் இருக்கும் ஆக்டோபஸ் அதன் ஓட்டுக்குள் போய் மூடிக்கொள்ளும் அழகிய காட்சி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
When octopuses are stressed, they generally don't want to be seen much. pic.twitter.com/7sJl1N9bOt
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 2, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |