பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தண்ணீர் கொடுக்கக்கூடாது ஏன்?
பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதற்கான காரணத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கப் போகின்றது என்றால் அந்த குடும்பத்தில் அளவற்ற மகிழ்ச்சியும் காணப்படும். குடும்பத்தில் புதிய வரவை எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.
ஆனால் குழந்தை பிறந்த பின்பு அதனை வளர்ப்பது என்பது கடினமாக காரியம் ஆகும். பேசத்தெரியாத குழந்தை தனக்கு ஏற்படும் தொந்தரவுகளை அழுது தான் வெளியே கூறுகின்றது.

இந்த அழுகை எதனால் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது தாயின் திறமையாக இருக்கின்றது. குழந்தை பிறந்தால் அதற்கு தாய்பால் மட்டுமே கொடுப்பதற்கு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்காமல் இருப்பதை பல பெற்றோர்கள் யோசிப்பதுண்டு. அவ்வாறு குழந்தை பிறந்த பின்பு எத்தனை மாதம் தண்ணீர் கொடுக்கலாம்? எதற்காக அதற்கு முன்பு கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைக்கு எப்போது தண்ணீர் கொடுக்கலாம்?
குழந்தையின் மற்றும் பராமரிப்பு குறித்து தாயும், தந்தையும் கவலைப்படுவது இயல்பானதாக இருந்தாலும், 6 மாதங்கள் வரை எவ்வாறு வளர்ப்பது என்ற எண்ணமும் இருக்கும்.
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தாய்பாலில் தேவையான அனைத்து சத்துக்கள் இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கின்றது.
ஆனால் தண்ணீர் கொடுப்பது குறித்து பெற்றோர்களுக்கு கவலை இருக்கும். இந்த கேள்விற்கு மருத்துவர்களின் பதில் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று தான் கூறுகின்றனர்.

குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கொடுக்கக்கூடாது. இந்த காலக்கட்டத்தில் தண்ணீரோ வேறு எந்தவொரு திரவ உணவுகளோ கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலில் தண்ணீர் சத்தும் இருக்கின்றது.
சுமார் 80 முதல் 90 சதவீதம் தண்ணீர் இருப்பதால், குழந்தையின் தாகம் இயற்கையாகவே தனிந்துவிடுமாம். ஆதலால் தனியாக தண்ணீர் கொடுப்பது கூடாது.
மேலும் வெளியிலிருந்து கொடுக்கும் தண்ணீரானது நீர் நச்சுத்தன்மை எனப்படும் தீவிர நிலைக்கு கொண்டு செல்லுமாம். மேலும் 6 மாதங்களுக்கு குறைவான குழந்தைக்கு சிறுநீரகங்கள் முதிர்ச்சியடையாமல் இருக்கும் என்பதாலும், தண்ணீர் குடிப்பதால் சோடியம் அளவு குறைந்து குழந்தைக்கு நோய் தாக்குதல் அல்லது வலிப்பு ஏற்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |