வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்த சோதனை.. என்ன தீர்வு?
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்றைய தினம் புது பிரச்சினையொன்று கிளம்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்து.
இன்றைய அவசர உலகில் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொள்வதற்காக வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்படுகிறது.
மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கூகுள் மூலம் வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை உலகெங்கும் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த செயலி, பயனர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போன்று அப்டேட் செய்யப்படுகிறது.
வெறும் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தும் செயலியாக இருந்த வாட்ஸ்சப் குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், ஸ்டோரி, யுபிஐ பேமெண்ட் வசதி உள்ளிட்ட பல வசதிகளை அப்டேட் செய்து விட்டது.
பயனர்களுக்கு வந்த சோதனை
இந்த நிலையில், இவ்வளவு அப்டேட்களை பயனர்களுக்காக வழங்கும் வாட்ஸ்சப் செயலி வெப்பில் பயன்படுத்தும் பொழுது scroll செய்யும் அம்சம் வேலை செய்யாமல் போய் விட்டதாக இணையவாசிகள் புகார்களை பதிவு செய்துள்ளனர்.
தற்போது பழைய நிலைக்கு திரும்பினாலும் தொடர்ந்து இது போன்று சிறு சிறு சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
