இந்த எண் உங்க ATM PIN நம்பரா? இனி வைக்காதீங்க- உடனே மாத்துங்க
தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாக பணப்பரிமாற்றம் பணத்தினால் நடப்பதை விட வங்கிகள் மூலம் நடப்பது தான் அதிகம்.
எங்கு சென்றாலும் பணத்தை எடுத்து செல்வதை விட டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
அப்படி பணத்தை பெற நாம் பயன்படுத்தும் வங்கி ATM-களில் பணம் மீளப்பெறல், ஆன்லைன் ஹாப்பிங், கட்டணங்கள் செலுத்துதல் போன்ற வேலைகளை செய்யலாம்.
தற்போது வங்கி ATM-களை குறி வைத்து நிறைய மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. மாறாக வங்கி ATM அட்டைகளை பயன்படுத்தும் பயனர்களின் PIN நம்பரை கூட வைத்து மோசடி செய்து வருகிறார்கள்.
நமது PIN நம்பரை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனின், ஹேக்கர்களுக்கும் பயனர்களின் PIN நம்பரை தெரிந்துக் கொள்வது தற்போது இலகுவாகி விட்டது. இதனை பயன்படுத்தி அவர்கள் நம்முடைய பணத்தை நொடியில் அழித்து விடுவார்கள்.
அப்படியாயின், என்னென்ன எண்களை PIN நம்பராக வைத்துக் கொள்ளக் கூடாது? எவை பாதுகாப்பாக இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பாதுகாப்பற்ற PIN நம்பர்கள்
சிலர் ATM அட்டைகளுக்கான PIN நம்பரை மாற்றாமல் பல வருடங்களாக ஒரே நம்பரை வைத்திருப்பார்கள். இது சிலருக்கு பிரச்சினையாக வரலாம். மோசடிகள் செய்பவர்கள் இது இலகுவாக போய் விடும்.
உதாரணமாக, 1234, 1111, 2222, 3333, 0000, 5555 ஆகிய எண்கள் பயன்படுத்துவதை குறைக்க வுண்டும். அதே போன்று இன்னும் சிலர் கொஞ்சம் வித்தியாசமாக (4321) PIN நம்பரை பயன்படுத்துவார்கள்.
இது போன்ற எண்கள் பயன்படுத்தும் பொழுது பயனர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலும், பிறந்த தேதியை சிலர் PIN நம்பராக வைத்திருப்பார்கள். உதாரணமாக, 1308 (ஆகஸ்ட் 13), 1511 (அக்டோபர் 15) மற்றும் பிறந்த ஆண்டுகளான 1999, 1998, 2000 ஆகியவற்றை PIN நம்பராக வைத்திருப்பார்கள்.
இப்படி பயன்படுத்தும் பொழுது பயனர்களின் பிறந்தநாள் சமூக வலைத்தளங்களில் பார்வையிடலாம் என்பதை மோசடி செய்பவர்கள் அறிந்து வைத்திருப்பார்க்ள. இதனை முக்கிய ஆதாரமாக வைத்து கொண்டு முயற்சித்தால் உங்களுடைய PIN நம்பரை தெரிந்து கொள்ளலாம்.
அதே போன்று மொபைல் எண் இலக்கங்கள், வாகன எண், ஆதார் எண் ஆகிய எண்களை பயன்படுத்தும் பொழுது மோசடி செய்பவர்கள் இலகுவாக கண்டுபிடித்து விட வாய்ப்பு உள்ளது.
எனவே சைபர் பாதுகாப்பு அறிக்கைகளின்படி, ஹேக் செய்ய சில வினாடிகள் மட்டுமானது பாதுகாப்பான PIN நம்பர்களை பயன்படுத்த வேண்டும். சீரற்ற எண்களை கூட பயன்படுத்தலாம்.
உதாரணமாக, 4892, 3927 போன்றவற்றை பயன்படுத்தலாம்.
6 முதல் 12 மாதங்களுக்கு ஒரு தடவை உங்களுடைய PIN நம்பரை மாற்று வேண்டும். இது குறித்து யாரிடமும் பகிராமல் இருக்க வேண்டும். தினசரி பரிவர்த்தனைகளை செய்யும் மக்களுக்கு ஏற்ப சிறிய நோட்டுகளை எளிதாக பெற்றும் கொள்ளும் வகையில் வங்கிகள் தங்களுடைய வேலையாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |