Whatsapp-ல் புதிய அப்டேட்... இனி Message இப்படியும் அனுப்பலாம்! ஏன் இந்த மாற்றம் தெரியுமா?
வாட்ஸ்அப் செயலியில் மல்டி அக்கவுண்ட் அம்சத்தினை ஆண்ட்ராய்டு பிட்டா பயனர்களுக்கு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து மற்றொரு புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில், புதிய வசதிகளை வழங்கி வரும் நிலையில், இதன் புதிய தகவல்கள் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது ஐரோப்பிய யூனியன் டிஸிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றியுள்ளதுடன், இதனால் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளையும் பிறப்பித்துள்ளது.
இதனால் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ்அப்பும் முன்னணி தொழில்நுட்ப தளம் என்பதால் இந்த டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த விதிகளுக்கு ஏற்ப தனது செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ் அப் ஈடுபட்டுவரும் நிலையில், இது தொடர்பான விதிகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்று இருக்கிறது.
இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய அம்சத்தில் வேறு குறுந்தகவல் செயலினை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவலை அனுப்ப முடியுமாம்.
மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதி செயலியின் எதிர்கால வெர்ஷனில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |