தொலைபேசியை மாற்றுகிறீர்களா? வாட்ஸ் அப் சாட் பேக்கப் இப்படியும் எடுக்கலாம்
WhatsApp
By Manchu
இன்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அனைவரையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வாட்ஸ்அப்பில் உள்ள சேட் பேக்கப்பை புதிதாக போன் மாற்றினால் எவ்வாறு மீட்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
- முதலில் WhatsApp Messenger-ன் புதிய பதிப்பை நிறுவிய பின்பு, உங்கள் மொபைலில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள், மீடியா மற்றும் கோப்புகளை அணுக WhatsApp க்கு அனுமதி கொடுக்கவும்.
- பின்பு மெசேஜ் மூலமாக 6 இலக்க சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவதுடன், அது தானாகவே சரிபார்த்துவிடும். SMS செய்திகளை அனுப்பவும் பார்க்கவும் WhatsAppஐ அனுமதிக்க வேண்டும்.
- உங்களது 6 இலக்க எண் சரிபார்க்கப்பட்ட பின்பு சாட் பேக்கப் என்ற ஆப்ஷன் தோன்றும். இதனை Restore என்ற ஆப்ஷனை உள்ளிட வேண்டும். இதைச் செய்வதன் மூலம், கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனில் செய்திகள் பேக் அப் எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து சாட் பேக்கப் எடுத்த கூகுள் கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்தவும்.
- நெக்ஸ்ட் என்பதைத் தெரிவு செய்துவிட்டு, தொடர்ந்து சுயவிபர தகவல் ப்ரொபைல் இடத்தில் உங்களது பெயரை குறிப்பிடவும்.
- பின்பு சில வினாடிகளில் துவக்கம் வர ஆரம்பித்துவிடும் நிலையில், அதில் வாட்ஸ் அப் அரட்டை திரையாக இருக்கும். இவ்வாறு திறக்கும் திரையில் உங்களது சாட் பேக்அப் அனைத்தும் எடுக்கப்பட்டிருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US