WhatsApp செட்டிங்க்ஸ் மாற்றம்: உங்க வாட்ஸ்அப் செட்டிங்ஸில் இந்த 'பட்டன்' இருக்கா?
வாட்ஸ்அப் பீட்டா ப்ரோக்ராமில் இணையாமலே புதிய வசதிகளைப் பெற தற்போது வாட்ஸ்அப் 'Early access to features' என்ற புதிய சுவிட்ச் வசதியை தந்துள்ளது.
வாட்ஸ்அப் 'Early access to features'
வாட்ஸ்அப் பயனர்கள் புதிய வசதிகளை (Features) மற்றவர்களுக்கு முன்னதாகவே பயன்படுத்த விரும்பினால், அவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 'பீட்டா ப்ரோக்ராம்' (Beta Program) இல் இணைந்தால் போதும்.
ஆனால், இந்த பீட்டா குழுவில் எப்போதும் இடம் இருக்காது. "Beta program is full" என்ற செய்திதான் பலருக்கும் கிடைக்கும். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.

புதிய 'Early Access' சுவிட்ச்
WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, வாட்ஸ்அப் தனது செயலியில் "Early access to features" (அம்சங்களுக்கான ஆரம்ப அணுகல்) என்ற புதிய ஆப்ஷனைச் கொடுத்துள்ளது.
இதன் மூலம், பயனர்கள் அதிகாரப்பூர்வ பீட்டா திட்டத்தில் இணையாமலேயே, தற்போது இருக்கும் டெக்னோலஜிக்கு அமைய புதிய விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும் எனப்படுகின்றது.

எப்படி செயல்படும்?
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.26.2.11-ல் இந்த புதிய வசதி காணப்படுகிறது. செட்டிங்ஸில் உள்ள சுவிட்சை ‘ஆன்’ செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பீட்டா அம்சங்களை பயனர்கள் பயன்படுத்தலாம்.
சோதனை அம்சங்களில் உள்ள கோளாறுகள் பிடிக்கவில்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் அந்த சுவிட்சை off செய்து, வழக்கமான ஸ்டேபிள் பதிப்பிற்கு திரும்ப முடியும்.
தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பீட்டா திட்டத்திற்கு 10,000 பேர் மட்டுமே சேர முடியும் என்ற வரம்பு உள்ளது. இந்த புதிய இன் ஆப் முறையால் அந்த கட்டுப்பாடு நீங்கி, அதிகமான பயனர்கள் புதிய அம்சங்களை அனுபவிக்க முடியும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தற்போது இந்த வசதி குறிப்பிட்ட சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே சோதனையில் உள்ளது. எதிர்காலத்தில் இது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
எனவே, உங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸை அவ்வப்போது சோதித்துப் பாருங்கள்; நீங்களும் அந்த அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |