Whatsapp update: AI தொழிநுட்பத்தை வாட்ஸ்அப்பிற்குள் கொண்டு வரும் மெட்டா- பயன்படுத்துவது எப்படி?
உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான மக்கள் Whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். எந்த நாட்டிற்கு சென்றாலும் உடனே செயற்படும் வகையில் அதன் அம்சங்கள் அனைத்தும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயனர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக மாறி விட்டது. வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமலேயே பயனர்கள் AI இன் அம்சங்களை பயன்படுத்த புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது Whatsapp செயலியின் தாய் நிறுவனமான மெட்டா AI (Meta AI) விட்ஜெட் பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் செயலியைத் திறக்காமலே AI அம்சத்தைப் பயன்படுத்த உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு WABetaInfo என்ற அம்சம் பற்றிய விவரங்கள் வெளியாகியன. இந்த விட்ஜெட், தற்போது சமீபத்திய பீட்டா வெர்ஷனில் இருக்கிறது என பயனர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின், AI விட்ஜெட் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? அதனை எப்படி பயன்படுத்துவது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Ai widget அம்சம்
புதிய அம்சம் அறிமுகம்
புதிய Meta AI விட்ஜெட் அம்சமானது, வாட்ஸ்அப் செயலியைத் திறந்து சாட்பாட்டிற்குள் சென்று கேள்விகளைக் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் செய்துள்ளது.
இனிவரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் இருந்தே நேரடியாக படங்களை பதிவேற்றவும், AI சாட்பாட்டின் வாய்ஸ் மோடு (Voice Mode) மூலம் உரையாடுவது போன்ற வேலைகளை செய்யலாம்.
WABetaInfo பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் இருந்து, வாட்ஸ்அப்பின் புதிய மெட்டா AI விட்ஜெட் தேவையான அளவுக்கு மாற்றி அமைக்கும் வசதியும் கொண்டுள்ளது. பயனர்களின் விருப்பத்திற்கமைய எளிதாக அளவை மாற்ற முடியும். மாறாக இந்த அம்சத்தை மெட்டா AI வசதி கொண்ட வாட்ஸ்அப் வெர்ஷன் பயன்படுத்துபவர் மாத்திரமே இந்த விட்ஜெட்டை பெற முடியும்.
AI வசதியினால் பயனர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
1. மெட்டா நிறுவனத்தின் லாமா எல்.எல்.எம். மூலம் இயக்கப்படும் வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா AI, ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி போல பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
2. படங்களை உருவாக்கவும் செய்கிறது.
3. தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் கூட இதனை பயன்படுத்தலாம். கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப்பில் மெட்டா AI அம்சத்தை பயன்படுத்தி வருவதால் இந்த புதிய விட்ஜெட் மூலம் சாட்பாட் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கலாம்.
மெட்டா நிறுவனம் படிப்படியாக பயனர்களின் கோரிக்கைக்கமைய புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில், வாட்ஸ்அப் 22 புதிய சாட் தீம்கள், டேப் ரியாக்ஷன்கள், செல்ஃபி ஸ்டிக்கர்கள் மற்றும் பகிரக்கூடிய ஸ்டிக்கர் பேக்குகள் போன்ற பல புதிய அம்சங்களை பதிவேற்றம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |