வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு அப்டேட்... என்னனு தெரியமா?
வாட்ஸ் அப் நிறுவனம் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அம்சத்தில் சிலவற்றை சேர்த்துள்ளது.
வாட்ஸ் அப்
இன்று மொபைல் போன் வைத்திருக்கும் பெரும்பாலான நபர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடல் தாண்டி காணப்பட்டாலும் வாட்ஸ் அப் மூலம் உடனே தொடர்பு கொண்டு பேசவும், முகத்தினை பார்த்துக் கொள்ளவும் முடிகின்றது.
நாளுக்கு நாள் டெக்னாலஜி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு போகும் நிலையில், பயனர்களின் பாதுகாப்பு என்பது சற்று யோசிக்க வைக்கின்றது.
இதற்கு வாட்ஸ்அப் முக்கிய பாதுகாப்பு அம்சத்தில் மேலும் சிலவற்றினை சேர்த்துள்ளது.
புதிய அம்சம் என்ன?
வாட்ஸ்அப் தனது பாதுகாப்பு அம்சத்தில் மேலும் சிலவற்றை சேர்த்துள்ளது. பயனர்கள் ஒரு குரூப்பில் இருந்து எளிதாக வெளியேறவும், சேரவும் முடியும்.
வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு பயனர் சேரும் போது, குறித்த குரூப் பற்றிய கூடுதல் தரவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் தெரியாத நபர்கள் உங்களைக் குரூப்பில் சேர்த்தாலோ, தெரியாத குரூப்பில் சேர்க்கப்பட்டாலோ உடனே தகவல் தெரிவிக்கப்படுமாம்.
இதன் மூலம் புதிதாக வந்துள்ள குரூப்பில் உங்களை யார் சேர்த்துள்ளது, குறித்த குரூப் எப்பொழுது, யாரால் தொடங்கப்பட்டது என்ற அனைத்து விபரங்களும் காண்பிக்குமாம். படிப்படியாக இந்த அம்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று குறித்த நிறுவனம் கூறியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் தவறான குரூப்பில் சேர்த்து மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு வசதி கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |